மலேசியாவில் மீண்டும் “லாக் டவுன் கட்டுப்பாடு” நடப்புக்கு வருமா? – உண்மை நிலவரம் என்ன?

travel-to-malaysia-cny-2024
Pic: File/TODAY

மலேசியாவில் மீண்டும் லாக் டவுன் கட்டுப்பாடு நடப்புக்கு வருமா என்ற கேள்வியும் பல கருத்துக்களும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

கோவிட்-19 தொற்றுநோய் உச்சக்கட்டத்தில் இருந்தபோது நடைமுறையில் இருந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு (MCO) மீண்டும் செயல்படுத்துவது குறித்து மலேசியா பரிசீலிக்கவில்லை என அந்நாட்டு அரசாங்கம் கூறியுள்ளது.

4 லாரி விபத்தில் உயிரிழந்த ஊழியர் “மெக்கானிக்காக” பணிபுரிந்தவர் – 2 மாதங்களுக்கு முன் தான் திருமணம் நடந்தது

இதனை சுகாதார அமைச்சர் துல்கெஃப்லி அஹ்மட் நேற்று டிசம்பர் 18 அன்று அறிவித்தார்.

சமீபத்தில் அந்நாட்டில் தொற்றுநோய்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் கூட லாக் டவுன் கட்டுப்பாடுகள் குறித்து பரிசீலிக்கவில்லை என சுகாதார அமைச்சகத்தின் தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

இருப்பினும், மலேசியாவில் கோவிட் பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பது கவலை அளிப்பதாக அவர் கூறினார்.

ஆனால், முன்னர் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை அமல்படுத்தாமல் நிலைமையை சமாளிக்க முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த தொற்றுநோய் எண்ணிக்கை அதிகரிப்பு நாட்டின் சுகாதார வசதிகளில் எந்த சுமையையும் ஏற்படுத்தவில்லை என்றும் டாக்டர் துல்கெஃப்லி கூறினார்.

கவலைப்பட வேண்டாம் என்றும், அதே நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அவர் வலியுறுத்தினார்.

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் வெளிநாட்டு ஊழியர்களை குறிவைக்கும் கும்பல்