சர்வதேச பயணிகளுக்கு எல்லைகளை மீண்டும் திறக்க உள்ள மலேசியா

Malaysia Airports/Facebook

மலேசியா அடுத்த ஆண்டு ஜன. 1ஆம் தேதி சர்வதேச வருகையாளர்களுக்கு அதன் எல்லைகளை மீண்டும் திறக்க உள்ளது.

தனது சுற்றுலாத் துறையின் மீட்சியை விரைவுபடுத்துவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

கட்டுமான தளத்தில் கிரேனில் 70மீ உயரத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஊழியருக்கு திடீர் காயம்

இதனை மலேசியாவின் முன்னாள் பிரதமரும், தேசிய மீட்பு கவுன்சில் (NRC) தலைவருமான முகைதின் யாசின் தெரிவித்தார் என்று CNN தெரிவித்துள்ளது.

அதிகரித்த கோவிட்-19 தடுப்பூசி விகிதத்தின் காரணமாக மலேசியா அதன் எல்லைகளைத் திறக்கத் தயாராக இருப்பதாக முகைதின் கூறினார்.

தற்போது, ​​மலேசியாவின் 32 மில்லியன் மக்கள் தொகையில் முக்கால்வாசிக்கும் அதிகமானோர் முழுமையாக தடுப்பூசி போட்டுள்ளனர்.

2020ஆம் ஆண்டு அனைத்து வெளிநாட்டு வருகையாளர்களுக்கும் மலேசியா தனது சர்வதேச எல்லைகளை மூடியது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர்-மலேசியா இடையே கடந்த நவம்பர் 8-ம் தேதி முதல் தடுப்பூசி போட்டுகொண்டோருக்கான பயணத் திட்டம் (VTL) நடைமுறையில் உள்ளது.

VTL படி, முழுமையாக தடுப்பூசி போட்டுகொண்ட பயணிகள் சிங்கப்பூர்-மலேசியா இடையே பயணம் செய்ய முடியும்.

வேலை மாறும் ஒர்க் பெர்மிட் அனுமதி உடைய வெளிநாட்டு ஊழியர்களுக்கு MOM அப்டேட்