சிங்கப்பூரில் 60 ஆண்டுகளுக்கு மேலாக பழக்கடை நடத்தி வரும் “91 வயது இளைஞர்” – கடும் மழைக்கு மட்டுமே விடுமுறை

Man 91 sells fruits Rochor over 60 years
Photo: Lianhe Zaobao

சிங்கப்பூரில் 91 வயதான முதியவர் ஒருவர், சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக பழங்களை விற்பனை செய்து வருகிறார்.

ஆல்பர்ட் ஸ்ட்ரீட் மற்றும் ஷார்ட் ஸ்ட்ரீட்டில் அவரின் கடை இன்றும் இயங்கி வருவதாக சொல்லப்பட்டுள்ளது.

சாங்கி ஏர்போர்ட்டில் 2018ல் திருடி தப்பிச்சென்ற நபர், 2024இல் சிங்கப்பூர் திரும்பியபோது கைது

அந்த கடைக்கு அருகிலேயே அவர் 68 வயதுமிக்க தனது மகளோடு வசித்து வருகிறார். தினமும் சக்கர நாற்காலியில் தந்தையை அழைத்து சென்று கடையை திறப்பதற்கு அவர் உதவி செய்து வருவதாகவும் சீன நாளிதழான Lianhe Zaobao (Zaobao) விடம் அவரின் மகள் கூறினார்.

அதாவது 16 ஆண்டுகளுக்கு முன்பு அவரின் மகள் பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார், அதிலிருந்து தனது தந்தைக்கு கடையை திறக்க அவர் உதவி செய்து வருகிறார்.

தந்தைக்கு கடையில் நேரத்தை செலவழிக்க ரொம்ப பிடிக்கும் என்றும் அவர் கூறினார்.

அவர் வழக்கமாக தனது கடையை காலை 11 மணிக்கு திறந்து இரவு 10 மணிக்கு அடைத்து விடுவார்.

குறிப்பாக மழைக்காலத்தில் மட்டும் அதுவும் திறக்க முடியாத அளவுக்கு மழை பெய்தால் மட்டுமே கடைக்கு விடுமுறை விடுவாராம்.

அவரின் இளமை காலத்திலும் கூட, ​​​​அவர் அதிக நேரம் வேலை செய்வார் என்றும், நள்ளிரவு வரை கடையைத் திறந்து வைத்திருப்பார் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

அவர் ஒருவர் மட்டுமே உழைத்து அவர்களின் குடும்பத்தை காத்து வந்ததாக மகள் சொன்னார்.

இந்த வயதான இளைஞர், உழைக்கும் வர்க்கம் அனைவருக்கும் ஓர் அழகிய எடுத்துக்காட்டு.

வெளிநாட்டு ஊழியருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் – “சட்டம் தன் கடமையை செய்தது”