பேனாக் கத்தியால் தாக்கியதாக சந்தேகத்தின்பேரில் ஆடவர் கைது

வெளிநாட்டு ஊழியரை

சிங்கப்பூரில் ஆடவர் ஒருவரை பேனாக் கத்தியால் தாக்கியதாக சந்தேகத்தின்பேரில் 30 வயதுடைய ஆடவர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 2) கைது செய்யப்பட்டார்.

இச்சம்பவம் மாலை 5.50 மணியளவில் பிளாக் 89 பெடோக் நார்த் ஸ்ட்ரீட் 4இல் நடந்ததாக சிங்கப்பூர் போலீஸ் படை செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

முகக்கவசத்தை சரியாக அணியச் சொன்ன பேருந்து ஓட்டுனரை தாக்கிய இருவர்

தரை விசாரணைகளை தொடர்ந்து, போலீஸ் அதிகாரிகள் சந்தேக நபரை ஒரு மணி நேரத்திற்குள் கைது செய்தனர், மேலும் குப்பை தொட்டியில் இருந்து பேனா கத்தியையும் மீட்டனர்.

முதற்கட்ட விசாரணையில், தாக்குதலுக்கு ஆளான 26 வயது ஆடவரை குற்றம் சாட்டப்பட்டவருக்கு தெரியாது என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், அவரது கழுத்தின் பின்புறத்தில் சிறிய காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.

அந்த 30 வயது ஆடவர் மீது தானாக முன்வந்து ஆபத்தான ஆயுதங்களால் காயப்படுத்திய குற்றத்திற்காக புதன்கிழமை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம், பிரம்படி அல்லது அத்தகைய தண்டனைகள் கலவையாகவும் விதிக்கப்படலாம்.

தங்கும் விடுதியில் வன்முறை ஏற்பட்டுவிடுமோ என்பதால் கூடுதல் பிரிவுகள் தயார் நிலையில் இருந்தன – அமைச்சர்