சிங்கப்பூர் பூங்காவில் காட்டுக் கோழியை பிடித்து தீர்த்துக்கட்டிய வெளிநாட்டு ஊழியர்? – சட்டத்தின்படி குற்றம்

man-catch-kill-chicken-park
Joel Lee / Facebook

சிங்கப்பூர் பூங்கா ஒன்றில் ஆடவர் ஒருவர் காட்டுக் கோழியை பிடித்து கொன்றதாக கூறப்படுகிறது.

“Nature Society Singapore” ஃபேஸ்புக் குழுவில் கடந்த பிப்ரவரி 17 அன்று வெளியான பதிவில் ஜோயல் லீ என்பவர் இந்த காட்சியின் படங்களை பகிர்ந்தார்.

சிங்கப்பூர் லாட்டரி கடைக்கு சென்ற பெண்ணின் செயலால் கடுப்பான நெட்டிசன்கள்

அன்றைய தினம் பூங்காவில் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தபோது, ​​ஆடவர் ஒருவர் காட்டுக் கோழியைக் கொன்றதைக் கண்டதாக லீ தனது பதிவில் கூறினார்.

அது எந்த இடம் என்பதை அவர் வெளியிடவில்லை, மேலும் அந்த ஆடவர் கோழியை எப்படி பிடித்தார் என்பதையும் லீ விவரிக்கவில்லை.

பதிவில் இது சட்டத்திற்கு புறம்பான செயல் என்று சிலர் கருத்து தெரிவித்திருந்தனர்.

மேலும், அந்த ஆடவர் வெளிநாட்டு ஊழியராக இருக்கலாம் என்றும், சிங்கப்பூரில் வனவிலங்கு பாதுகாப்பு சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் பற்றி அவருக்குத் தெரியாமல் இருக்கலாம் என்றும் ஒரு பயனர் ஊகித்து கமெண்ட் செய்தார்.

வனவிலங்கு சட்டத்தின்படி, வனவிலங்கு நிர்வாகத்தின் அனுமதியின்றி வனவிலங்குகளைக் கொல்வது, பொறி வைப்பது அல்லது அழைத்துச் செல்வது சட்டவிரோதமானது.

இந்த வழக்கு குறித்து விரைவில் புகார் செய்யப்படும் என்று Acres இணை தலைமை நிர்வாக அதிகாரி அன்பு பகிர்ந்துள்ளார்.

இவ்வாறான குற்றத்திற்கு S$10,000 வரை அபராதம், ஆறு மாதங்கள் வரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

சிங்கப்பூர் ஆஃபர்: பாதி விலையில் அதிரடி தள்ளுபடி விற்பனை – பிப்.21 முதல் 25 வரை