சிங்கப்பூரில் தடுப்பூசி தொடர்பில் மோசடி… சிக்கிய ஆடவர் – நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

Pic: REUTERS/Edgar Su

கோவிட்-19 தடுப்பூசி பதிவுகள் தொடர்பில் ஊழல் செய்ய முயற்சித்த சந்தேகத்தின்பேரில் ஆடவர் ஒருவர் மீது இன்று வியாழன் (ஜனவரி 13) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக ஊழல் தடுப்பு பிரிவு (CPIB) செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் 26ஆம் தேதி, சுவா சூ காங் சமூக மன்றத்தில் உள்ள ஹெல்த்வே தடுப்பூசி நிலைய செவிலியருக்கு S$50 லஞ்சம் வழங்கியதாகவும் 34 வயதான சிங்கப்பூரர் டான் லி மிங் கெல்வின் மீது குற்றம் சாட்டப்பட்டது.

பிளீஸ்..! இனி நம்ம ஆட்கள் மேல் எப்படி மதிப்பு வரும்..? சிங்கப்பூரை திணறடிக்கும் லிட்டில் இந்தியா!

இரண்டாவது Pfizer-BioNTech கோவிட்-19 தடுப்பூசி டோஸ் போட்டுக்கொண்டதாக ஹெல்த்கேர் அமைப்பில் பதிவு செய்ய, அவர் செவிலியருக்கு லஞ்சம் கொடுக்க முற்பட்டுள்ளார். ஆனால், அதனை செவிலியர் ஏற்கவில்லை.

ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், அவர் ஒரு குற்றச்சாட்டை எதிர்கொள்கிறார் என்று CPIB தெரிவித்துள்ளது. பிப்ரவரியில் அவர் நீதிமன்றத்திற்குத் திரும்புவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஊழலில் ஈடுபட்ட எவருக்கும் அதிகபட்சமாக S$100,000 அபராதம் அல்லது ஐந்து ஆண்டுகள் வரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

சிங்கப்பூரில் 882 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு – மேலும் புதிதாக 797 பேருக்கு ஓமிக்ரான் தொற்று