ஊழியர் விளையாட்டாக செய்த காரியம் அவருக்கே வினையாய் போனது – சிறை விதிப்பு

ஊழியர் விளையாட்டாக செய்த காரியம் அவருக்கே வினையாய் போனது - சிறை விதிப்பு
(PHOTO: Mothership)

தனக்கு COVID-19 பாதிப்பு இருப்பதை அறிந்திருந்தும், ஊழியர் ஒருவர் வேண்டுமென்றே தனது சக ஊழியர்களை நோக்கி இருமினார்.

இந்த மோசமான செயலுக்காக 64 வயதான தமிழ்செல்வம் ராமையாவுக்கு இரண்டு வார சிறைத்தண்டனை நேற்று (செப்.18) விதிக்கப்பட்டது.

கோவிலில் பெண்ணை அறைந்து, இழிவாக பேசி.. ஆடவர் ஒருவரை தமிழில் மோசமாக திட்டிய இந்தியர்

கோவிட்-19 விதிமுறைகளை மீறியதாக ஒரு குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார். மேலும் இரண்டு குற்றச்சாட்டுகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன.

தமிழ்செல்வம் அப்போது லியோங் ஹப் சிங்கப்பூர் (Leong Hup Singapore) நிறுவனத்தில் துப்புரவுப் ஊழியராக பணியாற்றியதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

2021 அக்டோபர் 18, அன்று அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக உதவி தளவாட மேலாளரிடம் கூறினார். பின்னர் ART பரிசோதனை எடுக்கச் சொல்லப்பட்டது. அதில் அவருக்கு பாசிட்டிவ் முடிவும் வந்துள்ளது.

இதனை அடுத்து, உதவி தளவாட மேலாளரிடம் இந்த ரிசல்ட்டை பற்றி கூறுமாறும், பின்னர் வீட்டுக்கு செல்லுமாறும் அவருக்கு அறிவுறுத்தப்பட்டது.

ஆனால், தமிழ்செல்வம் உடனடியாக வீட்டுக்குச் செல்லவில்லை. அதற்கு பதிலாக, கோவிட்-19 இருப்பதை பற்றி உதவி தளவாட மேலாளரிடம் தெரிவிக்க நிறுவனத்தின் தளவாட அலுவலகத்திற்குச் சென்றார்.

அதாவது பாசிட்டிவ் வந்தது பற்றி தெரியாத நிறுவன ஓட்டுனருடன் தமிழ்செல்வம் அவரின் அலுவலகத்திற்குள் நுழைந்தார்.

தமிழ்செல்வம் அருகில் செல்ல வேண்டாம் என்று அந்த ஓட்டுநரிடம் 40 வயது தளவாட மேற்பார்வையாளர் ஒருவர் கூறினார். மேலும் தமிழ்செல்வத்தை அலுவலகத்தை விட்டு வெளியேறச் சொல்லியும், அவரை உதைப்பது போல சைகையும் செய்தார் மேற்பார்வையாளர்.

இதனை அடுத்து வாசலுக்கு நடந்த தமிழ்செல்வம் அலுவலகத்திற்கு இரண்டு முறை இருமினார்.

மேலும் மூடிய மேற்பார்வையாளர் அறை கதவை திறந்து முகக்கவசத்தை கீழே இறக்கிவிட்டு மூன்றாவது முறையாக இருமினார்.

இந்த காட்சிகள் அனைத்தும் CCTV கேமராவில் பதிவானது.

அதோடு நிறுத்தாமல், தமிழ்செல்வம் வீட்டுக்கு கிளம்பிய போது, ​​தளவாட அலுவலகத்தில் கண்ணாடிக்கு மறுபுறம் இருந்த 56 வயது அலுவலரை நோக்கி ஜன்னல் வழியாக இருமியதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

இது குறித்து துணை தளவாட மேலாளர் போலீசிடம் புகார் அளித்தார்.

விசாரணையில் தன் சக ஊழியர்களிடம் விளையாட்டாக இருமியதாக அவர் கூறினார்.

“சிங்கப்பூருக்கு வர வேண்டும் என்று இதை செய்யாதீங்க” – சிக்கிய சிவகங்கை ஊழியர் மீது வழக்கு பதிவு