சிங்கப்பூரில் எண்ணெய் டேங்கர் லாரி மற்றும் கார் மோதி விபத்து; இளைஞர் பலி..!

Man dies after accident
A 21-year-old man has died after a road traffic accident along Nicoll Drive (Photo: Screenshot from video)

சிங்கப்பூர் நிக்கோல் டிரைவில் (Nicoll Drive) ஏற்பட்ட சாலை விபத்தில் 21 வயது இளைஞர் (மார்ச் 21) உயிரிழந்தார்.

தெலோக் பக்கு (Telok Paku) சாலையை நோக்கி செல்லும் நிக்கோல் டிரைவில், எண்ணெய் டேங்கர் லாரி மற்றும் கார் சம்பந்தப்பட்ட விபத்து ஏற்பட்டது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் புதிதாக 47 பேருக்கு COVID-19 உறுதி; மொத்தம் 400ஐ தாண்டியது..!

இந்த விபத்து குறித்து, காலை 9.51 மணியளவில் தகவல் கிடைத்தாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் சிக்கிய, 21 வயது இளைஞரான கார் ஓட்டுநர், சாங்கி பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது மயக்கநிலையில் இருந்துள்ளார்.

ஆனால், அதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து போலீஸ் விசாரணை நடந்து வருகிறது.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் இருவர் நோய்த்தொற்று காரணமாக உயிரிழப்பு..!

#SingaporeLatestTamilnews #Tamilnews #சிங்கப்பூர்தமிழ்செய்திகள் #Singaporetamil