COVID-19: சிங்கப்பூரில் இருவர் நோய்த்தொற்று காரணமாக உயிரிழப்பு..!

சிங்கப்பூரில் இரண்டு நோயாளிகள் COVID-19 காரணமாக உயிரிழந்துள்ளனர், இவை இந்த நோய்த்தொற்றுடன் தொடர்புடைய நாட்டின் முதல் மரணங்கள் ஆகும்.

இதில், 75 வயதான சிங்கப்பூர் பெண் மற்றும் 64 வயதான இந்தோனேசிய ஆடவர் ஆகியோர் இன்று (மார்ச் 21) காலை உயிரிழந்ததாக சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் மேலும் 40 புதிய நபர்களுக்கு கிருமித்தொற்று உறுதி..!

சிங்கப்பூரில் சம்பவம் 90ஆக உறுதிசெய்யப்பட்ட அந்தப் பெண்மணி, தி லைஃப் சர்ச் மற்றும் மிஷன்ஸ் தேவாலயத்துடன் தொடர்புடையவர்.

இந்நிலையில், ICUவில் 26 நாட்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்ற அவர், சிகிச்சை பலனின்றி இன்று காலை 7.50 மணியளவில் உயிரிழந்தார்.

இவருக்கு உயர் இரத்த அழுத்தம், நாள்பட்ட இதயக் கோளாறு ஏற்கனவே இருந்தாக CNA குறிப்பிட்டுள்ளது.

மற்றொருவர், சம்பவம் 212ஆக உறுதிசெய்யப்பட்ட நபர், இதய பிரச்சனை ஏற்கனவே இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ICUவில் ஒன்பது நாட்கள் தீவிர சிகிச்சை பெற்றுவந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று சனிக்கிழமை காலை 10.15 மணிக்கு உயிரிழந்தார்.

இந்த இருவரின் மரணம் குறித்து ஆழ்ந்த வருத்தத்தை சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை அவர் தெரிவித்துக்கொண்டார். கூடுதலாக, அவர்களின் குடும்பத்தாருக்குத் தேவையான உதவிகள் அனைத்துயும் அமைச்சகம் வழங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Source : MOH

இதையும் படிங்க : COVID-19: வேலை அனுமதி அட்டை உடையவர்கள் கவனத்திற்கு – மனிதவள அமைச்சகம்..!

#coronavirusSingapore #coronavirusnews #coronavirusupdateinSingapore #coronavirusupdate #coronavirusSingaporecases #coronavirusinSingapore #SingaporeLatestTamilnews #Tamilnews #சிங்கப்பூர்தமிழ்செய்திகள் #Singaporetamil