காருக்குள் ரொமான்ஸ்… பாம்பு போல சென்ற கார் – “வீட்டில் போய் செய்யவேண்டியது தானே?” – நெட்டிசன்கள் காட்டம்

Stomp

சில தம்பதிகள் எல்லா நேரங்களிலும் ரொமான்ஸ் செய்ய விரும்புவார்கள் என்று கேள்வி பட்டுயிருப்போம், அதற்காக ரோட்டில் வாகனம் ஓட்டும்போது கூடவா? என்று நெட்டிசன்கள் பலர் கருத்து கூறும் அளவிற்கு அரேங்கேரிய சம்பவம் குறித்து இந்த பதிவில் காண்போம்.

பெண்ணை முத்தமிட்டபடி தன் வாகனத்தை பாம்பு போல சாலையில் ஓட்டிய ஆடவர் குறித்து சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல் ஆகி வருகிறது.

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் நின்று கொண்டிருந்த கார்கள் மீது லாரி மோதி விபத்து

புக்கிட் திமா விரைவுச் சாலையை நோக்கிய வழியில் சிலேத்தர் விரைவுச் சாலையில் சென்று கொண்டிருந்த காரில் இந்த சம்பவம் நடந்ததாக ஸ்டாம்ப் தெரிவித்துள்ளது.

சிந்தனை சிதறல் ஏற்பட்டதால் கார் பாம்பு போல சாலையில் சென்றதாகவும், இதனால் விபத்து ஏற்பட கூட வாய்ப்புள்ளது என்றும் ஸ்டாம்ப் வாசகர் கவலையுடன் கூறியுள்ளார்.

“ஓட்டுவது, முத்தமிடுவது, தொடுவது… பாம்பு போல் ஓட்டுவது. மிகவும் ஆபத்தானது” என்றார் அவர்.

மேலும், “உங்களுக்கு ரொமான்ஸ் செய்ய ஆசை இருந்தால் வீட்டுக்குச் சென்று அதைச் செய்யுங்கள்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூரில் முதல் குரங்கம்மை தொற்று.. வெளிநாட்டவருக்கு உறுதி – நெருங்கிய தொடர்புகளுக்கு தனிமை