வாடகை வண்டிக்கு $40 கட்டணத்தை கொடுக்காமல் தப்பித்து சென்ற பயணி.. நீண்ட நேரம் காத்திருந்த ஓட்டுநர் – வருத்தத்துடன் பதிவு

man escape didn't pay fare
Stomp

தனியார் வாடகை வண்டிக்கு கட்டணத்தை செலுத்தாமல் தப்பித்து சென்ற பயணி குறித்து ஓட்டுநர் வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.

தனக்கு செலுத்த வேண்டிய $40 கட்டணத்தை ATMஇல் இருந்து எடுத்து தருகிறேன் என்று கூறிவிட்டு அப்படியே பயணி சென்றிவிட்டதாக கிராப் ஓட்டுநரான அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறுவன் போல நடித்து, சிறுமியிடம் ஆசையை தீர்த்துக்கொண்ட 44 வயது ஆடவர் – 18 பிரம்படி, 19 ஆண்டுகள் சிறை

இந்த சம்பவம் கடந்த அக்.13 அன்று நடந்ததாக சைமன் என்ற அவர் Stomp தளத்திடன் கூறினார்.

அன்று காலை 8.30 மணியளவில், பிளாக் 106 ரிவர்வேல் வாக்கில் இருந்து அந்த பயணியை அழைத்து சென்றதாக ஓட்டுநர் சொன்னார்.

ஒன் ராஃபிள்ஸ் பிளேஸில் உள்ள அலுவலக கட்டிடம் தான் அவர் இறங்க வேண்டிய இடம்.

பயண கட்டணம் $40.30

சரியாக காலை 9 மணியளவில் இறங்கும் இடம் வந்ததும், பயண கட்டணம் $40.30 செலுத்த வேண்டும் என ஓட்டுநர் கூறியுள்ளார்.

பணம் செலுத்தும் முறையில் அவர் Cash ஐ தேர்வு செய்திருந்துள்ளார், இதனை அடுத்து PayNow செய்யலாமா என்று பயணி கேட்டுள்ளார்.

Stomp

“பணம் பரிமாற்றம் செய்ய எனது தொடர்பு எண்ணை நான் அவருக்கு அனுப்பினேன். அதைத் தொடர்ந்து, அவர் பணப் பரிமாற்றம் செய்துவிட்டதாகக் கூறினார், ஆனால் அந்தத் தொகை வந்ததாக எனக்கு எந்த அறிவிப்பும் வங்கியிலிருந்து வரவில்லை.”

“அவரது கைபேசியில் உள்ள பரிவர்த்தனை விவரத்தை என்னிடம் காட்டுங்கள் என்று நான் அவரிடம் கேட்டேன், ஆனால் அதற்கு அவர் பரிவர்த்தனையை ஸ்கிரீன்ஷாட் எடுக்கவில்லை என்று கூறினார்.”

ATM சென்றவர் அப்படியே எஸ்கேப்

அருகில் உள்ள ATM இயந்திரத்தில் இருந்து பணத்தை எடுத்து தருகிறேன் என்று அவர் கூறிவிட்டு சென்றதாக ஓட்டுநர் குறிப்பிட்டார்.

“பின்னர் அவர் அலுவலக கட்டிடத்திற்குள் நுழைந்தார், சில நிமிடங்களுக்குப் பிறகு, அவர் கட்டிடத்திலிருந்து வெளியே வந்து என்னிடம் ஏதும் கூறாமல் அங்கிருந்து நடந்து சென்றார்.”

பணத்தை எடுக்க சென்றுள்ளார் என நினைத்த ஓட்டுநர், கிராப் செயலி மூலம் அவரை தொடர்பு கொள்ள பலமுறை முயற்சித்தும் அவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.

ஜாக்கிரதை

எனவே, PHV வாடகை ஓட்டுனர்கள் ஜாக்கிரதையாக இருங்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூரில் நிகழ்ச்சிகள், பொதுக் கூட்டங்களுக்கு அனுமதி இல்லை – அனைத்தும் நிராகரிப்பு