சிங்கப்பூரில் நிகழ்ச்சிகள், பொதுக் கூட்டங்களுக்கு அனுமதி இல்லை – அனைத்தும் நிராகரிப்பு

events assemblies applications rejected spf
File Photo : Singapore Police

இஸ்ரேல்-ஹமாஸ் சண்டை காரணமாக சிங்கப்பூரில் நிகழ்ச்சிகள் மற்றும் பொதுக் கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை என சொல்லப்பட்டுள்ளது.

பாதுகாப்புக் காரணங்களால் அதற்கான விண்ணப்பங்கள் அனைத்தும் நிராகரிக்கப்படும் என்று சிங்கப்பூர்க் காவல் படையும் (SPF) தேசிய பூங்கா கழகமும் (NParks) கூட்டாகச் செய்தி வெளியிட்டுள்ளன.

ரொட்டி வாங்க காசு இல்லாமல் தவித்த வெளிநாட்டு பணிப்பெண்… ரொட்டியுடம் பணத்தையும் அள்ளிப்போட்டு கொடுத்த பெண்மணி

ஏனெனில், இதனால் பொது பாதுகாப்பு குறித்த அக்கறை எழும் என காவல்துறை மற்றும் NParks கூறியுள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ் சண்டைக்கு மத்தியில் பல நாடுகளில் பல வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளதையும் அவை சுட்டிக்காட்டின.

சிங்கப்பூரில் பல்வேறு இனங்கள் மற்றும் சமயங்கள் இடையே அமைதி மற்றும் நல்லிணக்கம் நிலவுவதை குறிப்பிட்ட அவைகள், சிங்கப்பூரில் உள்நாட்டு பாதுகாப்பை பாதிக்கும் வெளிநாட்டு நிகழ்வுகளை நாம் அனுமதிக்கக்கூடாது என்றும் கூறியது.

வெளிநாட்டு ஊழியர்களே சலுகையை பயன்படுத்துங்க.. இனி வெறும் S$15 செலுத்தி இந்த சேவையை பெறலாம்!