நிலைதடுமாறி கால்வாயில் விழுந்த ஆடவர் – மிகவும் பலவீனமாக இருந்ததாக தகவல்

நிலைதடுமாறி கால்வாயில் விழுந்த ஆடவர் - விரைந்து வந்து உதவிய SCDF
Sam Young/Facebook

Telok Kurau பகுதியில் உள்ள கால்வாயில் விழுந்த நபரை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் (SCDF) பத்திரமாக மீட்டனர்.

இது குறித்த புகைப்படங்களை Love Cycling SG group குழுவின் உறுப்பினர் சாம் யங் என்பவர் பேஸ்புக்கில் வெளியிட்டார்.

சிங்கப்பூரில் இந்திய ஊழியருக்கு சிறை விதிப்பு.. பிரம்படி??

அதில் இரண்டு SCDF அதிகாரிகள் ஆடவர் ஒருவரை ஏணியில் பாதுகாப்பாக ஏற்ற முயற்சிப்பது தெரிகிறது.

நிலைதடுமாறிய அந்த ஆடவர் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் விழுந்ததாக நம்பப்படுகிறது.

யங் அந்த நபரை சைக்கிள் ஓட்டும்போது விழுந்த கண்டதாகவும், அவர் மிகவும் பலவீனமாக இருந்ததால் மேலே ஏற முடியவில்லை என்றும், அதன் பிறகு அந்த நபருக்கு உதவ முயற்சித்ததாகவும் தனது பதிவில் கூறினார்.

ஆனால், அந்த கால்வாயின் கட்டமைப்பு மிகவும் சறுக்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதன் பின்னர் தகவல் அறிந்து வந்த SCDF வீரர்கள் துரிதமாக செயல்பட்டு அவரை பாத்திரமாக மீட்டதாக சொல்லப்பட்டுள்ளது.

“சிங்கம் போன்ற தனித்துவமான சிங்கப்பூர்.. கட்டியெழுப்பிய தந்தை லீ குவான் யூ” – வரலாற்றை சொல்லும் மிக நீளமான சுவரோவியம்