சிங்கப்பூரில் முறையான அனுமதி இல்லாமல் கொத்தமல்லி இறக்குமதி செய்தவருக்கு அபராதம்..!

Man fined for importing more than 450kg of coriander without proper permit
Man fined for importing more than 450kg of coriander without proper permit (Photo: Pixabay/ReStyled Living)

சிங்கப்பூரில் முறையான அனுமதி இல்லாமல் 456 கிலோகிராம் கொத்தமல்லியை இறக்குமதி செய்ததற்காக ஆடவர் ஒருவருக்கு S$3,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

டெய்லி கோ ஃப்ரெஷில், 47 வயதான கோ சீ வீ என்பவர் முறையான அனுமதி பெறாமல் புதிய காய்கறிகளை விற்பனைக்கு இறக்குமதி செய்ததாக குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.

இதையும் படிங்க : மாணவிக்கு தொல்லை; சிங்கப்பூரில் பணிபுரிந்தவரை மாஸ்டர் பிளான் போட்டு கைது செய்த போலீஸ்..!

கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி பாசிர் பஞ்சாங் மொத்த விற்பனை மையத்தில், ஏல மேடையில் சிங்கப்பூர் உணவு ஆணையம் (SFA) அதிகாரிகள் ஒரு டிரக்கை ஆய்வு செய்ததாக CNA குறிப்பிட்டுள்ளது.

அந்த வாகனத்தில் தாய்லாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட புதிய பழங்கள் மற்றும் காய்கறிகள் இருந்தன என்று SFA வழக்கறிஞர் தெரிவித்தார்.

அதில் அனுமதி பெறப்படாத 456Kg கொத்தமல்லியை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்டு நான்கு நாட்களுக்கு பின்னர் அவைகள் அழிக்கப்பட்டது என்றும் CNA குறிப்பிட்டுள்ளது.

அவருக்கு S$10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம், மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் அல்லது இரண்டும் இருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : பேட்மிண்டன்; முதல் சுற்று ஆட்டத்தில் சிங்கப்பூர் வீரரை வீழ்த்தி தமிழக வீரர் வெற்றி..!