ஹென்டர்சன் சாலை அருகே கண்டெடுக்கப்பட்ட ஆடவர் சடலம்.. யார் ?

ஹென்டர்சன் சாலை
Tamil Micset Singapore File Photo

ஹென்டர்சன் சாலையின் உள்ள குடியிருப்பில் 64 வயதான ஆடவர் ஒருவர் இறந்து கிடந்ததாக செய்தி வெளியாகியுள்ளது.

பிளாக் 92 ஹென்டர்சன் சாலையின் மூன்றாவது மாடியில் உள்ள அவரது குடியிருப்பில் இந்த சம்பவம் நடந்ததாக ஷின் மின் டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது.

வேலை அனுமதிக்காக இத செய்யாதீங்க.. வெளிநாட்டவருக்கு சிறை

அந்த நபர் தனியாக வசித்து வந்தார் என்றும், அக்டோபர் 6 ஆம் தேதி மாலை அவரை அவரைப் பார்த்ததாகவும் அண்டை வீட்டுப் பெண் ஒருவர் கூறியுள்ளார்.

பின்னர் அக். 7 ஆம் தேதி அன்று, அந்த ஆடவர் ஆடையில்லாமல் தரையில் கிடந்ததாகவும் அதனை பார்த்ததாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில், ஆடவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டது.

இந்த சம்பவத்தை இயற்கைக்கு மாறான மரணமாக போலீசார் வகைப்படுத்தியுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையைத் தொடர்ந்து, சதிச்செயல் எதுவும் நடந்ததாக சந்தேகிக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

விசாரணைகள் நடந்து வருகின்றன.

போக்குவரத்து விளக்குகள் வேலை செய்யல.. மழையை பொருட்படுத்தாது போக்குவரத்தை சீர்ப்படுத்திய ஊழியர்