7 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்ட வெளிநாட்டவருக்கு சிறை மற்றும் பிரம்படி..!

man-2500-fine-obscene-act-overhead-bridge
(PHOTO: Dhany Osman / Yahoo News Singapore)

சிங்கப்பூரில், ஏழு வயது சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்டதற்காக வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

சீன நாட்டைச் சேர்ந்த 36 வயதான சென் பெய்லின் என்பவருக்கு, 14 மாத சிறைத்தண்டனையும், மூன்று பிரம்படியும் (ஜூன் 24) விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : உணவகங்களில் மற்றவர்களுடன் பேசும் போது முகக்கவசம் அகற்ற அனுமதி இல்லை – MOH..!

இந்த ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி இரவு 7 மணியளவில் மேற்கு சிங்கப்பூரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் உள்ள ஒரு கிளினிக்கிற்கு சென் மருத்துவரைப் பார்க்கச் சென்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து, அவர் கிளினிக் கவுண்டரில் பதிவுசெய்து விட்டு, தனக்கான வரிசை எண்ணை எடுத்துக்கொண்டு காத்திருக்கும் இடத்தில் அமர்ந்தார்.

அதன் பிறகு, பாதிக்கப்பட்ட அந்த சிறுமி தனது தந்தை, தாய் மற்றும் சகோதரருடன் கிளினிக்கிற்குள் நுழைவதை சென் கண்டார்.

சிறுமி மிகவும் அழகாக இருந்ததால், அவருக்கு தொடுவதற்கு உணர்வுகள் தூண்டியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னர், உணவு அறைக்கு செல்லும் சிறுமியை பின்தொடர சென் முடிவு செய்தார், அதன் பிறகு அந்த சிறுமியை அணைத்து, பலமுறை தகாத முறையில் தொட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் மருத்துவமனையின் தொலைக்காட்சி கேமராவில் படம்பிடிக்கப்பட்டது.

பின்னர் சிறுமியின் தந்தை சுமார் 20 நிமிடங்கள் கழித்து காவல்துறையை அழைத்தார், பின்னர் சென் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டார்.

இதுபோன்ற குற்றங்களுக்காக, ஐந்து ஆண்டுகள் வரை சிறை, அபராதம் விதிக்கப்படலாம், பிரம்படி அல்லது இந்த தண்டனைகளில் ஏதேனும் சேர்ந்து வழங்கப்படலாம்.

இதையும் படிங்க : 2021ஆம் ஆண்டுக்கான சிங்கப்பூர் பொது விடுமுறை நாட்கள் வெளியீடு..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook https://www.facebook.com/tamilmicsetsg/
?? Helo          http://m.helo-app.com/al/vppxQmsFr
?? Twitter      https://twitter.com/tamilmicsetsg
??Telegram  https://t.me/tamilmicsetsg
?? Sharechat https://sharechat.com/tamilmicsetsg