விமானத்தில் கப் ஹோல்டரில் கையை விட்ட பயணி.. சிக்கிக்கொண்டு தவித்த நகைச்சுவை வீடியோ

man-hand-stuck-in-cup-holder-plane
Darshen/Instagram

விமானத்தில் கப் வைக்கும் ஹோல்டரில் கையை விட்ட சிங்கப்பூரர் ஒருவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அவர் விளையாட்டாக உள்ளே விட்ட கையை வெளியே எடுக்க முயற்சி செய்தார், ஆனால் அவரால் வெளியே எடுக்க முடியவில்லை.

உடல்நிலை சரியில்லாத வெளிநாட்டு ஊழியர்.. விடுதிக்கு திரும்ப பேருந்துக்காக 3 மணிநேரம் காத்திருந்த சோகம்

ஆபிரகாம் என்ற அவர், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் வியட்நாமுக்கு கடந்த செப்டம்பர் 30, அன்று பயணிக்கும் போது இந்த சம்பவம் நடந்தது.

அவர் தனது நண்பர் மற்றும் உள்ளூர் TikTok வீடியோ உருவாக்கும் தர்ஷன் என்பவருடன் விடுமுறைக்காக அங்கு சென்று கொண்டிருந்தார்.

இந்நிலையில், அவரின் கை சிக்கிய நகைச்சுவையான சம்பவத்தை அவரது நண்பர் வீடியோ எடுத்ததாக சொல்லப்பட்டுள்ளது.

கப் ஹோல்டருக்குள் தன் கை பொருந்துமா என்று ஆபிரகாம் யோசித்துக் கொண்டிருந்தார் என்றும், ஆனால் அவரின் கை அதில் மாட்டிக்கொள்ளும் என்று அவர்கள் நினைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

கப் ஹோல்டரில் சுமார் 10 நிமிடங்கள் ஆபிரகாமின் கை சிக்கியிருந்ததாக தர்ஷன் கூறியுள்ளார்.

இந்த நகைச்சுவையான வீடியோ சிங்கப்பூர் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு போக்குவரத்து வசதி இல்லை.. $2 கொடுத்து சட்டவிரோத லாரி சேவையில் பயணிக்கும் நிலை