மேற்பார்வையாளரின் கிரெடிட் கார்டை தவறாக பயன்படுத்தியதற்காக ஊழியருக்கு சிறை

சிங்கப்பூரில் தனது மேற்பார்வையாளரின் கிரெடிட் கார்டை தவறாக பயன்படுத்தியதற்காக ஊழியர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

பணியிடத்தில் பிரியாவிடை விருந்து வழங்க, மேற்பார்வையாளரின் கிரெடிட் கார்டு விவரங்களைப் பயன்படுத்தி உணவை ஆர்டர் செய்ததாக ஊழியர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

கனரக வாகனத்தில் இருந்து பறந்த டயர் – கார் ஒன்றை தாக்கும் காணொளி!

இதில் ஊழியர் தனது சொந்த உணவுக்காகவும் மற்றும் கிராப் ரைடுகளுக்கும் அந்த கிரெடிட் கார்டு விவரங்களைப் பயன்படுத்தினார் என்றும், அதாவது இரண்டு மாதங்களுக்குள் சுமார் S$3,300க்கும் அதிகமாக அவர் செலவழித்தார் என்றும் கூறப்பட்டுள்ளது.

டேவிட் லாயிட் கோம்ஸ் (வயது 27) என்ற அந்த ஊழியருக்கு இன்று திங்கள்கிழமை (நவம்பர் 29) இரண்டு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட 31 வயதான விற்பனை மேலாளரின் மேற்பார்வையின்கீழ், கோம்ஸ் ஒரு நிறுவனத்தில் நிர்வாக எழுத்தராக பணிபுரிந்ததாக கூறப்படுகிறது.

கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் 28, அன்று அவரது நிறுவனம் சக ஊழியருக்கு பிரியாவிடை நிகழ்வை ஏற்பாடு செய்தது. அப்போது மேற்பார்வையாளர் அவரது கிரெடிட் கார்டு விவரங்களை கோமஸிடம் கொடுத்தார்.

அதைக்கொண்டு அவர் நிகழ்விற்கான கிராப்ஃபுட் டெலிவரிக்கு பணம் செலுத்தினார். அப்போது தான் ஊழியருக்கு அந்த விவரங்கள் கிடைத்துள்ளது.

வெளிநாட்டு பயணிகளுக்கு இந்தியாவில் தீவிர கண்காணிப்பு – சிங்கப்பூர் உள்ளிட்ட பயணிகளுக்கு தனிமை…