கடனை அடைக்க வேண்டி தன் சிறுநீரகத்தை S$10,600க்கு விற்ற வெளிநாட்டு நபர் – வாங்கியவர் சிங்கப்பூரர்

man-sell-kidney-singaporean-buyer
YouTube/Tribun Timur

வெளிநாட்டு ஆடவர் ஒருவர் தனது கடனை அடைப்பதற்காக வேண்டி தன்னுடைய ஒரு சிறுநீரகத்தை S$10,600க்கு விற்றதாகக் கூறப்பட்டுள்ளது.

41 வயதான இந்தோனேசிய நபரான அவர், 2019ஆம் ஆண்டு தனது சிறுநீரகத்தை உறுப்பு கடத்தல் கும்பலிடம் விற்றதாக கூறினார்.

3G சேவைக்கு குட் பை சொல்லும் சிங்கப்பூர்.. 2024 முதல் இயங்காது

அவர் தனது சிறுநீரகத்தை சிங்கப்பூரைச் சேர்ந்த நபர் ஒருவரிடம் விற்றததாகவும் கூறியுள்ளார்.

அதன் பின்னர் அவர் கம்போடியாவில் உள்ள சிறுநீரக விற்பனை கும்பலிடம் ஒருங்கிணைப்பாளராக சேர்ந்ததாகவும், சிறுநீரக தேவை உள்ளவர்களுக்கு அதனை விற்க உதவியதாகவும் கூறினார்.

இந்நிலையில், அவர் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

முன்னதாக, ஜூலை மாதத்தில் இந்த கும்பலின் முயற்சியை இந்தோனேசிய காவல்துறை முறியடித்தது. அதில் போலீஸ்காரர் மற்றும் குடிநுழைவு அதிகாரி உட்பட 12 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த கும்பல் சுமார் 122 நன்கொடையாளர்களுக்கு சிறுநீரக மாற்று சிகிச்சையை எளிதாக அமைத்துக்கொடுத்ததாக சொல்லப்பட்டுள்ளது.

இதில் தொடர்பில் உள்ள குற்றவாளிகளை தேடி வருவதாக இந்தோனேசிய போலீசார் தெரிவித்தனர்.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

சிங்கப்பூர் சாலைகளில் செல்லும் நீங்கள் இந்த தவறை ஒருபோதும் செய்யாதீர்கள்: மீறிய வெளிநாட்டு ஊழியருக்கு S$4,800 அபராதம்