3G சேவைக்கு குட் பை சொல்லும் சிங்கப்பூர்.. 2024 முதல் இயங்காது

3G சேவைக்கு குட் பை சொல்லும் சிங்கப்பூர்.. 2024 முதல் இயங்காது
Singtel, Starhub & M1 will retire 3G services (Photo: Tenor, Shutterstock)

சிங்கப்பூரில் வரும் 2024 ஆம் ஆண்டு ஜூலை 31, முதல் 3G சேவை இயங்காது என M1, Singtel மற்றும் Starhub ஆகியவை தெரிவித்துள்ளன.

அதாவது குரல், செய்தி மற்றும் தரவு உட்பட 3G சேவைகளை அந்நிறுவனங்கள் வழங்காது என தெரிவித்துள்ளன.

சிங்கப்பூரில் வேலை செய்ய “பெஸ்ட் நிறுவனம்” எது ? – நல்ல சம்பளம், சமமாக நடத்துதல், முன்னேற்றம்

புதிய தலைமுறைகளுக்கு ஏற்ப 5G அதிவேக இணைய சேவைகள் சிங்கப்பூரில் அறிமுகம் ஆனதால், அதிகம் பயன்படுத்தப்படாத பழமையான 3G சேவை இனி இயங்காது என்று மூன்று தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தெரிவித்தன.

3G சேவை இயங்காது என்ற அறிவிப்பு யாருக்கும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது, ஏனெனில் புதிய 4G மற்றும் 5G சேவைகள் ஏற்கனவே பலரின் விருப்பமான ஒன்றாக இருந்து வருகின்றன.

பழைய மொபைல் சாதனங்கள் அல்லது சிம் கார்டுகளில் உள்ளவர்கள் போன்ற சொற்பமான வாடிக்கையாளர்கள் மட்டுமே 3G சேவைகளுக்கு விசுவாசமாக உள்ளனர்.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

சிங்கப்பூர் சாலைகளில் செல்லும் நீங்கள் இந்த தவறை ஒருபோதும் செய்யாதீர்கள்: மீறிய வெளிநாட்டு ஊழியருக்கு S$4,800 அபராதம்