இந்தியரை நோக்கி காரி துப்பி, நடுவிரலை காட்டி இனவெறுப்பு தாக்கு – உடைந்துபோன ஊழியர் போலிசில் புகார்

man-spit-interracial-couple-orchard
Far East Malls website

சிங்கப்பூரில் இனவாதம் தொடர்பான பேச்சுக்கள் அடிக்கடி இடப்பெறுவதை நாம் செய்திகளின் மூலம் அறிந்து இருப்போம்.

சமீபத்தில் ஆர்ச்சர்ட் சென்ட்ரலில் இந்திய ஆணும் ஒரு சீனப் பெண்ணும் மற்றொரு இனவெறுப்பு தாக்குதல் பேச்சுக்கு ஆளானார்கள்.

கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி மதியம் ஆர்ச்சர்ட் சென்ட்ரலில் நடந்த சம்பவத்தில், மாலின் இரண்டாவது மாடியில் இருந்தபோது முன்பின் தெரியாத மூன்றாம் நபர் ஒருவர் அவர்கள் இருவரையும் நோக்கி துப்பியுள்ளார்.

சிங்கப்பூர் மணி எக்ஸ்சேன்ஞ்: வேலைகள், பயணங்கள் அதிகரிப்பு – உச்சத்தை தொடும் வர்த்தகம்

அந்த நபரை இதுவரை நான் பார்த்ததில்லை என்று கூறிய இந்தியர், அவர் 20 வயதுக்கு இடைப்பட்ட சீன ஆடவர் என்று விவரித்தார்.

உடனே சீன ஆடவரை திரும்பிப் பார்த்த இந்தியர்,” நீங்கள் எங்களை நோக்கி துப்புநிங்களா” என்று கேட்டார்.

அதற்கு சீனர் கூறிய பதில், “சீனப் பெண்ணுடன் நீ இருக்கக்கூடாது” மற்றும் “அது என் பெண் என்னுடன் தான் இருக்க வேண்டும்” என்று சத்தமிட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அந்த ஆடவர் மீண்டும் இந்தியரை நோக்கி எச்சில் துப்பியதாகவும், தனது நடுவிரலைக் காட்டி, அங்கிருந்து விரைவாக புறப்பட்டு சென்றதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

அதன் பின்னர், அதே நாளில் பிற்பகல் 3:50 மணியளவில் அவர் ஆர்ச்சர்ட் அக்கம்பக்கம் போலீஸ் நிலையத்தில் சீனர் மீது புகார் செய்தார்.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Work permit, வெளிநாட்டு ஊழியர்களே உங்கள் வேலைக்காக இதை கண்டிப்பா செய்ங்க – அச்சம் வேண்டாம்!