சிங்கப்பூர் ஹோட்டல் ஒன்றில் “கொரோனா, கொரோனா” என்று கூச்சலிட்டு தரையில் துப்பியவருக்கு சிறை..!

கிரவுன் பிளாசா (Crowne Plaza) சாங்கி விமான நிலைய ஹோட்டலில், அஸூர் (Azur) உணவகம் மூடப்பட்டதாக பணியாளர் ஒருவர் கூறியதை அடுத்து, தரையில் தட்டை உடைத்து ஒருவர் சச்சரவில் ஈடுபட்டார்.

ஜஸ்விண்டர் சிங் மெஹர் சிங் என்ற அந்த நபர், மேலும் இரண்டு முறை தரையில் துப்பியும், “கொரோனா, கொரோனா” என்றும் கூச்சலிட்டுள்ளார்.

இதையும் படிங்க : COVID-19: இந்தியாவில் உள்ள சிங்கப்பூரர்களை அழைத்துவர சிறப்பு விமானங்கள் ஏற்பாடு..!

52 வயதான சிங்கப்பூரர் ஜஸ்விண்டர் சிங்கிற்கு இரண்டு மாத சிறைத்தண்டனை வியாழக்கிழமை (ஏப்ரல் 2) விதிக்கப்பட்டுள்ளது.

இவர் பிப்ரவரி மாதம் சிறையில் இருந்து நன்னடத்தை காரணமாக விடுவிக்கப்பட்டார். ஆனால் சிங், இந்த குற்றச்செயலில் ஈடுபட்டதற்காக கூடுதல் 55 நாட்களை சிறையில் அடைக்கப்படுவார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவருக்கு ஏற்கனவே, துன்புறுத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காக ஆறு மாதங்கள் மற்றும் ஐந்து வார சிறைத்தண்டனை கடந்த ஜனவரி அன்று விதிக்கப்பட்டது.

உத்தரவின் ஒரு பகுதியாக, இந்த ஆண்டு பிப்ரவரி 28 முதல் ஏப்ரல் 26 வரை அவர் மேலும் எந்த குற்றங்களையும் செய்யக்கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இதையும் படிங்க : COVID-19 தொற்று காரணமாக சிங்கப்பூரில் 4வது நபர் மரணம்..!

கடந்த மார்ச் 3ஆம் தேதி காலை 10.30 மணியளவில், சிங் உணவகத்திற்குச் சென்று, ஒரு தட்டை எடுத்து, ஊழியர்களிடம் அறிவிக்காமல் பஃபே வரிசையில் நின்றுள்ளார்.

பின்னர், உணவகம் மூடப்பட்டிருப்பதாக ஒரு பணியாளர் கூறியதை அடுத்து, ​​அவர் தட்டை அடித்து நொறுக்கி, தரையில் துப்பினார். பின்னர் “கொரோனா, கொரோனா” என்றும் கூச்சலிட்டுள்ளார்.

மோசமான முறையில் செயல்பட்டதற்காக, சிங் ஆறு மாதங்கள் வரை சிறையில் அடைக்கப்பட்டலாம், $2,500 வரை அபராதம் விதிக்கப்படலாம்.