அங் மோ கியோ அவென்யூ 4-ல் உள்ள பிளாக் 113-ல் வசிப்போருக்கு கட்டாய கொரோனா பரிசோதனை!

Photo: Google Maps

 

சிங்கப்பூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சுகாதாரத்துறை அமைச்சகம் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில், கொரோனா மருத்துவ பரிசோதனைகளும் நாளுக்கு நாள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. ஒருவருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டாலும், அவர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அனைவருக்கும் கட்டாய கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில், நோய்த்தொற்று உறுதியாகும் நபர்களுக்கு உடனடி சிகிச்சையும் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் கொரோனா பரவலையும், அதன் பாதிப்பால் நிகழும் உயிரிழப்புகளையும் தடுக்க முடியும்.

இந்த நாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்தது சிங்கப்பூர்

இந்த நிலையில், “அங் மோ கியோ அவென்யூ 4-ல் உள்ள பிளாக் 113-ல் (Block 113, Ang Mo Kio Avenue 4) அடுக்குமாடு குடியிருப்பில் வசிக்கும் ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 9 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யும் பணி இன்று (29/08/2021) காலை 09.00 மணிக்கு தொடங்கியது. மாலை 04.00 மணி வரை நடைபெற உள்ள பரிசோதனையில் குடியிருப்பாளர்கள், அந்த பகுதியில் உள்ள கடைகளின் உரிமையாளர்கள், தொழிலாளர்களும் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

ஆகஸ்ட் 25- ஆம் தேதி முதல் கொரோனா பரிசோதனை செய்து, நோய்த்தொற்று இல்லை என்று முடிவு வந்தவர்கள், இன்று நடைபெற்று வரும் கட்டாய கொரோனா பரிசோதனையில் கலந்து கொள்வது கட்டாயம் இல்லை. பரிசோதனைகள் தொடர்பாகக் குடியிருப்பாளர்களுக்குத் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதோடு குறுஞ்செய்தியும் அனுப்பப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வாறு நோய்த்தொற்று பரவியது என்பது குறித்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மரினா பே ஈஸ்ட் கார்டனில் ​​ஆடவரை கடித்த 2மீ நீளம் உள்ள பாம்பு

இதனிடையே, சிங்கப்பூரில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 80% பேர் முழுமையாக தடுப்பூசிப் போட்டுக் கொண்டுள்ளனர். இதன் மூலம் சிங்கப்பூர் உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.