மரினா பே ஈஸ்ட் கார்டனில் ​​ஆடவரை கடித்த 2மீ நீளம் உள்ள பாம்பு

snake-bite-man-marina-bay-east
Via Mothership

மரினா பே ஈஸ்ட் கார்டன் பூங்கா இணைப்பில் நடைப்பயணத்தில் சென்ற ஒருவரை (1:20AM) பாம்பு கடித்தாக கூறப்பட்டுள்ளது.

அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு சிகிச்சைக்காக சென்றார்.

இந்த நாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்தது சிங்கப்பூர்

இந்த சம்பவம் தொடர்பான புகைப்படங்கள், கடந்த ஆகஸ்ட் 26 அன்று “Singapore Hikers” பேஸ்புக் குழுவில் வெளியிடப்பட்டன.

டென்னிஸ் க்வெக் (Dennis Kwek) என்ற அந்த ஆடவரின் வலது காலில் கடித்த பாம்பு, 2மீ நீளம் கொண்டது என அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

பாம்பு கடித்த பிறகு, க்வேக் உதவிக்காக 995 என்ற எண்ணை அழைத்ததாகவும் கூறியுள்ளார். இருப்பினும், அவர் மெதுவாக பேஷன் வேவ் பொது வாகன நிறுத்துமிடத்திற்கு நடந்து சென்று, பின்னர் மருத்துவமனைக்கு சென்றார்.

அவரை சீண்டிய அந்த பாம்பு விஷத்தன்மை இல்லாதது என்றும் அவர் மேற்கோள்காட்டியுள்ளார்.

இதற்கு முன்னர், நாகம்பாம்புகள் தென்பட்டது தொடர்பாக புகார்கள் கிடைத்தது குறித்து நாம் பதிவிட்டு இருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசியாவுக்குள் நுழையும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு