ஜாலான் கூக்கோ, சின் சுவீ ரோட்டில் உள்ள குடியிருப்புகளில் கட்டாய கொரோனா பரிசோதனை!

Photo: Google Maps

சிங்கப்பூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, கொரோனா பரிசோதனைகளும் நாளுக்கு நாள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒருவருக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டாலும், அந்த குடியிருப்பில் வசிக்கும் அனைவருக்கும், குடியிருப்பைச் சுற்றியுள்ள கடைகளின் உரிமையாளர்கள், தொழிலாளர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனையை சுகாதாரத்துறையின் மருத்துவக் குழு மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில், சுகாதாரத்துறை அமைச்சகம் (Ministry Of Health) நேற்று (14/08/2021) வெளியிட்டிருந்த அறிக்கையில், “ஜாலான் கூக்கோ (Jalan Kukoh), சின் சுவீ ரோடு (Chin Swee Road) ஆகிய இடங்களில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் (Housing and Development Board Blocks) நான்கு அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் சிலருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவிட்-19 தொற்றுநோயால் 3 வயது சிறுமி இறந்துவிட்டதாக பொய்யான செய்தி

பிளாக் 52, பிளாக் 53 சின் சுவீ ரோட்டில் (Block 52, Block 53 Chin Swee Road) உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த ஐந்து பேருக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல், பிளாக் 3, பிளாக் 9 ஜாலான் கூக்கோவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஏழு குடும்பங்களைச் சேர்ந்த 10 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது.

இந்த இடங்களில் கொரோனா நோய்த்தொற்றுத் தொடர்பைக் கண்டறிய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் ஆய்வு நடத்தப்படுகிறது. மேலும், கொரோனா நோய்த்தொற்று உறுதியான இடங்களில் வசிக்கும் அனைவரும் கட்டாய கொரோனா பரிசோதனை நடத்தப்படும். அதன்படி, ஜாலான் கூக்கோ உணவு நிலையத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவருக்கும், பிளோக் 3, 9-ல் (Blocks 3 and 9 Jalan Kukoh) அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்போருக்கும் இன்றும் (15/08/2021) நாளையும் (16/08/2021) கட்டாய கொரோனா பரிசோதனை நடத்தப்படும். காலை 09.00 AM மணியில் இருந்து மாலை 04.00 PM மணி வரை ஜாலான் கூக்கோ பிளோக் 9- ன் 4- வது மாடியில் உள்ள காலி இடத்தில கட்டாய கொரோனா பரிசோதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சின் சுவீ ரோடு பிளோக் 51- க்கும் பிளோக் 53- க்கும் இடையிலுள்ள கீழ்த்தளத்தில், இன்று (15/08/2021) காலை 09.00 AM மணியில் இருந்து மாலை 04.00 PM மணி வரை பரிசோதனைகள் நடைபெறுகிறது. கட்டாய கொரோனா பரிசோதனை குறித்த தகவல் சம்மந்தப்பட்ட குடியிருப்பில் வசிக்கும் அனைவருக்கும் துண்டு பிரசுரங்கள், குறுஞ்செய்தி மூலம தெரிவிக்கப்பட்டுள்ளது.” இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களின் வேலை அனுமதி நீட்டிப்பு – நிறுவனங்கள் வரவேற்பு

கொரோனா பரவலைத் தடுப்பதற்கு கொரோனா மருத்துவ பரிசோதனை மிகவும் அவசியம் ஆகும். பரிசோதனையை அதிகரிக்க அதிகரிக்க கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.