கொரோனா வைரஸ்; சிங்கப்பூரில் விதியை மீறிய நான்கு பேரின் வேலை அனுமதி (work pass) ரத்து..!

coronavirus outbreak : சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான கட்டாய விடுப்பு (LOA) விதியை மீறியதற்காக மனிதவள அமைச்சகம் (MOM) நான்கு பேரின் வேலை அனுமதியை (work pass) ரத்து செய்துள்ளது.

மேலும், ஆறு முதலாளிகளின் வேலையில் அமர்த்துவதன் தொடர்பில் வழங்கப்பட்ட அனுமதி சலுகைகளையும் இடைநிறுத்தியுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 19 வெளிநாட்டு ஊழியர்கள்..!

பிப்ரவரி 4 மற்றும் பிப்ரவரி 8ஆம் தேதிகளில் இடையில், வேலை அனுமதி வைத்திருந்த அந்த நான்கு பேர் தங்களது பணியிடங்களில் பணிபுரிந்துள்ளனர்.

ஆனால் அவர்கள் கட்டாய விடுப்பு எடுத்ததாக கருதப்படுகிறது, என அமைச்சகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 9) செய்திக்குறிப்பில் இதனை தெரிவித்துள்ளது.

அதை தொடர்ந்து, அவர்கள் 24 மணி நேரத்திற்குள் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாகவும், சிங்கப்பூரில் நிரந்தரமாக வேலை செய்ய அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பங்களாதேஷ் ஆடவர் முஸ்தஃபா பேரங்காடிக்குச் சென்றுள்ளார் – MOH..!

சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் நிலைமையை சரிக்கட்டும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, சீனாவின் பிரதான நிலப்பகுதிக்கு சமீபத்திய பயண வரலாற்றைக் கொண்ட அனைத்து வேலை அனுமதி வைத்திருப்பவர்களும் சிங்கப்பூருக்கு வந்ததும் 14 நாள் கட்டாய விடுப்பில் இருக்க வேண்டும் என்று அறிவிப்பு செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.