மார்ச் 07- ஆம் தேதி மஹா சிவராத்திரி வெள்ளி ரத ஊர்வலம்!

'ஸ்ரீ சிவன் கோயிலில், ஆடி மாதத்தின் இரண்டாவது அமாவாசை கடைபிடிக்கப்படும்' என அறிவிப்பு!
Photo: Sri Sivan Temple

 

மஹா சிவராத்திரியை முன்னிட்டு, சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீ சிவன் கோயிலில் (Sri Sivan Temple) வரும் மார்ச் 07- ஆம் தேதி அன்று மஹா சிவராத்திரி வெள்ளி ரத ஊர்வலம் (Silver Chariot) நடைபெறவுள்ளதாக இந்து அறக்கட்டளை வாரியம் அறிவித்துள்ளது.

தீப்பிடித்து எரிந்த மறுசுழற்சி டிரக் – காரணம் என்ன?

இந்து அறக்கட்டளை வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மஹா சிவராத்திரி 2024- ஐ முன்னிட்டு, சிங்கப்பூரில் உள்ள பிரசித்திப் பெற்ற ஸ்ரீ சிவன் கோயிலில் வரும் மார்ச் 08- ஆம் தேதி மாலை 06.15 மணி முதல் மார்ச் 09- ஆம் தேதி அதிகாலை 05.00 மணி வரை பூஜைகள் நடைபெறவுள்ளது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சிவன் அருளை பெறலாம்.

சிங்கப்பூர் வேலை வேண்டாம் என வேதாரண்யத்தில் பர்னிச்சர் ஷோரூம் திறந்த ஊழியர் – கடையை காண தாமாகவே வந்த முதலாளி

முன்னதாக, வரும் மார்ச் 07- ஆம் தேதி அன்று மாலை 06.30 மணிக்கு ஸ்ரீ சிவன் கோயிலில் மஹா சிவராத்திரி வெள்ளி ரத ஊர்வலம் நடைபெறவுள்ளது. ஸ்ரீ சிவன் கோயிலில் இருந்து புறப்படும் வெள்ளி ரத ஊர்வலம், இரவு 06.45 மணி முதல் இரவு 07.30 மணி வரை ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் நிற்கும். அதேபோல், இரவு 07.45 மணி முதல் இரவு 08.30 மணி வரை Chong Teck Siang Tng வெள்ளி ரதம் நிற்கும். பின்னர் இரவு 09.45 மணிக்கு மீண்டும் ஸ்ரீ சிவன் கோயிலை வெள்ளி ரதம் வந்தடையும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.