தீப்பிடித்து எரிந்த மறுசுழற்சி டிரக் – காரணம் என்ன?

recycling-truck-catches-fire
Stomp

சென்ட்ரல் பவுல்வர்ட் (Central Boulevard) மற்றும் ஷியர்ஸ் (Sheares) அவென்யூ சந்திப்பில் மறுசுழற்சி டிரக் வாகனம் ஒன்று தீப்பிடித்து எரிந்தது.

இந்த சம்பவம் மார்ச் 2 அன்று மதியம் 12.30 மணியளவில் நடந்ததாக வாசகர் எடுத்த புகைப்படங்களை ஸ்டாம்ப் பகிர்ந்துள்ளது.

சிங்கப்பூர் பொது இடங்களில் தப்பி தவறிக்கூட இதை செய்துவிடாதீர்கள் – மீறினால் உங்க “போட்டோ” வெளியாகலாம்

மெரினா பே MRT நிலையம் அருகே உள்ள condo showroom-க்கு வெளியே இருந்த வாகனம் தீப்பிடித்து எரிந்ததாக அவர் கூறினார்.

அன்று மதியம் 12.50 மணியளவில் சம்பவம் குறித்து தங்களுக்குத் தெரிவிக்கப்பட்டதாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) கூறியது.

பின்னர், தண்ணீர் பீச்சியடிக்கும் இரண்டு கருவிகளைப் பயன்படுத்தி தீ அணைக்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை.

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ONE Pass வேலை அனுமதி.. குறைந்தபட்சம் S$30,000 சம்பளம் – 4,200 வெளிநாட்டவர்களுக்கு அனுமதி