சிங்கப்பூரில் உள்ள பிரபல Marina Bay Sands Casino இரண்டு வாரங்களுக்கு மூடல்.!

Marina Bay Sands closure
Pic: File/Reuters

சிங்கப்பூரில் புதிதாக இரண்டு கிருமித்தொற்றுக் குழுமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. புதிய குழுமத்தில் Marina Bay Sand Casino இடம்பெற்றுள்ளது. அங்கு தற்போது 11 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Marina Bay Sands சூதாட்டக் கூடம் தொடர்பான கிருமித்தொற்று குழுமத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பற்றி விசாரணை நடைபெற்று வருவதாகவும், அங்கு கிருமிப்பரவல் தொடர்ந்து ஏற்படலாம் என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் இஸ்தானா திறப்பு ரத்து; அதிபர் அலுவலகம் அறிவிப்பு.!

கிருமித்தொற்று பரவலை முறியடிக்க, அந்த வளாகத்தில் சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும், இன்று (22-07-2021) முதல், அடுத்த மாதம் 5ம் தேதி வரை
Marina Bay Sands Casino மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Marina Bay Sands சூதாட்ட கூடத்தில் பணியாற்றும் அனைவருக்கும் சிறப்புப் பரிசோதனை நடத்தப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்த மாதம் 7ம் தேதி மற்றும் ஜூலை 21ம் தேதி வரை இடைப்பட்ட காலத்தில் அங்கு சென்று வந்த பொதுமக்களுக்கும் இலவசப் பரிசோதனை நடத்தப்படும்.

சிங்கப்பூரில் ஜூலை 22 முதல் நடப்புக்கு வரவுள்ள 2ஆம் கட்டம்