சிங்கப்பூரில் இஸ்தானா திறப்பு ரத்து; அதிபர் அலுவலகம் அறிவிப்பு.!

istana-open-house-cny
Pic: File/Today

சிங்கப்பூரில் COVID-19 கிருமித்தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த இஸ்தானா தேசிய தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்காக மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இஸ்தானா வருகின்ற ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி முதல் பொதுமக்களுக்காக திறக்கப்பட இருந்த நிலையில், இரண்டாம் கட்ட உயர் விழிப்புநிலை காரணமாக திறப்பு பின்னொரு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் உள்ள இந்த இரண்டு சந்தைகளை மூட உத்தரவு.!

சமூக அளவில் கிருமித்தொற்று பரவல் அதிகரித்துள்ளதாலும், கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ள காரணத்தாலும் இஸ்தானாவில் பொது உபசரிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு ஏதேனும் சிரமங்கள் ஏற்பட்டிருந்தால் அதற்கு வருந்துவதாக சிங்கப்பூர் அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த மே மாதம், நோன்புப் பெருநாள் மற்றும் மே தினத்தை முன்னிட்டு, இஸ்தானா பொதுமக்களுக்காக திறந்து விடப்பட்டிருந்தது. ஆனால், அப்போது COVID-19 இரண்டாம் கட்ட விழிப்புநிலையின்போது அந்தத் திட்டம் ரத்து செய்யப்பட்டது.

சிங்கப்பூரில் இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் அவசியம் – MOH