பிரம்மாண்டமாக நடக்கும் “மெரினா பே சாண்ட்ஸின்” விரிவாக்க பணிகள் – 2026இல் நிறைவு

மெரினா பே சாண்ட்ஸின் விரிவாக்க பணிகளை, US$3.3 பில்லியன் செலவில் தாய் நிறுவனமான லாஸ் வேகாஸ் சாண்ட்ஸ் மேற்கொண்டு வருகிறது.

முன்னர், வரும் 2025ஆம் ஆண்டு இந்த விரிவாக்க பணிகள் முடியும் என திட்டமிடப்பட்டது, ஆனால் அந்த காலக்கெடுவிற்கு ஒரு வருடம் கழித்து 2026ல் அந்த பணிகள் நிறைவடையும் என கூறப்பட்டுள்ளது.

கொள்ளையில் ஈடுபட்ட துஷீந்தர் சேகரனுக்கு சிறை, பிரம்படி – கார்த்திக் வழக்கு நிலுவை!

லாஸ் வேகாஸ் சாண்ட்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் தலைவரான ராப் கோல்ட்ஸ்டைன் கடந்த வியாழன் (ஜனவரி 27) அன்று 2021ஆம் ஆண்டின் செயல்திறன் பற்றி பேசினார்.

அப்போது, மெரினா பே சாண்ட்ஸின் ஹோட்டல்களை சுமார் US$1 பில்லியன் (S$1.35 பில்லியன்) செலவில் புதுப்பிப்பதாக கூறினார்.

கிருமித்தொற்று காரணமாக கட்டுமான துறையில் பெரிய பாதிப்பு ஏற்பட்டது.

மெரினா பே சாண்ட்ஸ் மற்றும் ரிசோர்ட்ஸ் வேர்ல்ட் செண்டோசா ஆகிய இடங்களின் புதுப்பிப்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டதாக அமைச்சர் ஆல் வின் டான் கூறினார்.

சிங்கப்பூர் காட்டில் 33 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்த மர்ம மனிதர் – யார் அவர்?