கட்டுமான தளத்தில் விபத்து… பலத்த சத்தம் – பதறிய ஊழியர்கள்: ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

crashes into fence in Marine Parade
SHIN MIN DAILY NEWS

சிங்கப்பூரில் கட்டுமான தளத்தில் நடந்த விபத்தில் சிக்கிய ஓட்டுநர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

பிளாக் 82 மரைன் பரேட் சென்ட்ரலுக்கு அருகில் உள்ள கட்டுமான தளத்தில் நின்ற இரண்டு மோட்டார் சைக்கிள்களின் மீது கார் மோதி பின்னர் தடுப்பு வேலியில் மோதி இந்த விபத்து ஏற்பட்டது.

“மெஷினை எப்படி இயக்குறதுன்னு தெரில”… முறையான பயிற்சி இல்லாததால் உயிரிழந்த ஊழியர்

இதனை அடுத்து விபத்தில் சிக்கிய 84 வயதான ஓட்டுநர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

இதில் பலத்த சத்தம் கேட்ட்டதாகவும் அப்போது ​​கட்டுமான தளத்தில் கனமான பொருள் ஏதோ விழுந்ததாக அங்குள்ளவர்கள் கருதினர்.

இந்த விபத்து நேற்று புதன்கிழமை காலை 11 மணியளவில் நடந்ததாக ஷின் மின் செய்தி கூறியுள்ளது.

காவல்துறை மற்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் கூற்றுப்படி, ஓட்டுநர் சுயநினைவுடன் ராஃபிள்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

கோவை வரும் அனைவருக்கும் மீண்டும் RTPCR சோதனை – அதோடு கூடுதல் கட்டுப்பாடுகள்