மார்சிலிங் லேன் ஈரச்சந்தை மற்றும் ஹாக்கர் மையம் தற்காலிமாக மூடல்.!

marsiling lane covid19 cases
Pic: Marsiling-Yew Tee Town Council/Facebook)

சிங்கப்பூரில் உள்ள மார்சிலிங் லேன் (Marsiling Lane) ஈரச்சந்தை மற்றும் ஹாக்கர் மையத்தில், COVID-19 கிருமித்தொற்று சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு துப்புரவு பணிகளை மேற்கொள்வதற்காக தற்காலிமாக மூடப்பட்டுள்ளது.

மார்சிலிங் லேன் ஈரச்சந்தை, ஹாக்கர் மையத்தில் உள்ள கடைக்காரர்கள் மற்றும் வேலை செய்வோர் ஆகியோர் நோய்வாய்ப்பட்டதாக தேசியச் சுற்றுப்புற அமைப்பு தெரிவித்துள்ளது.

பொய்யான தகவல்கள் மூலம் “Work Pass” அனுமதி பெற முயற்சி – 18 பேர் கைது

Marsiling-Yew Tee Town Council-லில் நேற்று (செப்டம்பர் 22) பிற்பகல் 3 மணிக்கு மேல் கிருமிநீக்கம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. ஹாக்கர் மையம் அடுத்த மூன்று நாட்களுக்கு மூடப்பட்டு, செப்டம்பர் 25ம் தேதி அன்று மீண்டும் திறக்கப்படும் என தேசியச் சுற்றுப்புற அமைப்பு தெரிவித்துள்ளது.

அங்குள்ள கடைக்காரர்களுக்குச் சேவை, பராமரிப்புக் கட்டணக் கழிவுகளை ஒரு வாரத்திற்கும் மேல் வழங்க தமது குழு நகர மன்றத்துடன் இணைந்து பணியாற்றி வருவதாக  Marsiling-Yew Tee குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஸாக்கி முகமது (Zaqy Mohamad) CNA-விடம் தெரிவித்துள்ளார்.

இதேபோல், ஆயர் ராஜா உணவகத்தில் கிருமித்தொற்று சம்பவங்கள் ஏற்பட்டதையடுத்து, சுத்திகரிப்பு பணிகளுக்காக கடந்த செப்டம்பர் 19 முதல் செப்டம்பர் 22 வரை மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆயர் ராஜா உணவகத்தில் கிருமித்தொற்று பாதிப்பு; உணவகத்தை மூட உத்தரவு.!