சிங்கப்பூர் சர்வதேச விமானங்களில் முகக்கவசம் கட்டாயமா? – இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விதி என்ன?

சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த மதுரை பயணி - கைதான கதை

சிங்கப்பூரில் முகக்கவசத்துக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன, அது இன்று ஆக.29 முதல் நடைமுறைக்கு வருகிறது.

அது ஒருபுறம் இருக்க, சர்வதேச விமானங்களில் நாம் முகக்கவசம் அணியலாமா ? என்ற கேள்வி நமக்குள் இருக்கும்.

சர்வதேச விமானங்கள் என்று வரும்போது, ​​நாம் செல்லக்கூடிய நாடு மற்றும் பயணிக்கும் விமானத்தில் என்ன விதிகள் உள்ளன என்பதைப் பொறுத்தது என்று MOH மருத்துவ சேவைகளின் இயக்குனர் கென்னத் மேக் கூறினார்.

சிங்கப்பூரில் இன்று ஆக.29 முதல் அதிகமான இடங்களில் முகக்கவசம் தேவையில்லை: எங்கெங்கு? – முழுவிவரம்

விமான நிறுவனங்கள் நாட்டை அடிப்படையாகக் கொண்டு முகக்கவசத்துக்கு தேவைகளை விதிக்கலாம், எனவே முகக்கவசம் அணிய வேண்டிய கட்டாயத் தேவை இருந்தால் … விமானத்தில் முகக்கவசத்தை அணிய வேண்டும்,” என்று கென்னத் மேக் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரில் ஏர்லைன்ஸ் குழும விமானங்களில் முகக்கவசம் கட்டாயமில்லை, இருப்பினும் அது செல்லும் நாடு/பகுதி பொறுத்து அதன் தேவை அமையும்.

குறிப்பாக, இந்திய மக்களுக்கு முகக்கவசம் கட்டாயம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஏனெனில் இந்தியாவில் இருந்து செல்லும், வரும் விமானங்களுக்கு முகக்கவசம் கட்டாயம் என்ற நடைமுறை உள்ளது.

அதே போல, பங்களாதேஷ்க்கு முகக்கவசம் கட்டாயம், இலங்கைக்கு கட்டாயம் இல்லை.

சிங்கப்பூரில் நீர்நிலைகளில் இறந்து கிடந்த 8 இளம் சுறா மீன்கள்!