சிங்கப்பூரில் இன்று ஆக.29 முதல் அதிகமான இடங்களில் முகக்கவசம் தேவையில்லை: எங்கெங்கு? – முழுவிவரம்

ஊழியர் விளையாட்டாக செய்த காரியம் அவருக்கே வினையாய் போனது - சிறை விதிப்பு
(PHOTO: Mothership)

சிங்கப்பூரில் இன்று திங்கட்கிழமை (ஆகஸ்ட் 29) முதல் பெரும்பாலான உட்புற இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டியதில்லை.

ஆனால், பொதுப் போக்குவரத்து மற்றும் சுகாதார பராமரிப்பு வசதிகளில் தொடர்ந்து முகக்கவசம் அணிய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

முகக்கவசம் அணிவதற்கான விதிகள் தளர்த்தப்படும் என்று பிரதமர் லீ தனது தேசிய தின பேரணி உரையின் போது கூறியதை அடுத்து அதிகாரிகள் இந்த விவரங்களை அறிவித்தனர்.

சிங்கப்பூரில் நீர்நிலைகளில் இறந்து கிடந்த 8 இளம் சுறா மீன்கள்!

எங்கெல்லாம் அணிய வேண்டும்?

  • பேருந்துகள்
  • ரயில்கள்
  • ரயில் தடங்கள் (Underground train platforms boarding areas)
  • பேருந்து முனையங்கள் (Indoor bus interchange)

எங்கெல்லாம் தேவையில்லை?

  • விமான நிலையம்
  • தனியார் பேருந்து சேவைகள் (பள்ளி பேருந்து, நிறுவன பேருந்து, ஷட்டில் பேருந்து)
  • டாக்சிகள் மற்றும் தனியார் வாடகை வாகனங்கள்
  • காற்றோட்டமான பேருந்து நிலையங்கள்
  • காற்றோட்டமான பேருந்து நிலைய சில்லறைக் கடைகள்

சாலையில் பெண்னை மானபங்கம் செய்த ஆடவர்… போட்டோ எடுத்துக்கொடுத்த பெண் – தட்டி தூக்கிய போலீஸ்