‘MWC’ ஏற்பாடு செய்துள்ள தொழிலாளர் தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் பிரபல திரைப்பட இயக்குநர் சசிகுமார்!

Photo: Migrant Workers' Centre Official Facebook Page

சிங்கப்பூருக்கு நிறைய பங்களித்த நம் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை கௌரவிக்கும் வகையிலும், மே தின கொண்டாடட்டங்களின் ஒரு பகுதியாகவும், பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு புலம்பெயர்ந்த தொழிலாளர் மையம் (Migrant Workers’ Centre- ‘MWC’) ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியானது வரும் மே 29- ஆம் தேதி அன்று இரவு 07.30 PM மணிக்கு நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளப்பக்கங்களில் நேரடியாக ஒளிபரப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கிரிக்கெட் போட்டியின் இறுதிச் சுற்று அன்றைய தினம் நடைபெற உள்ளது.

சிங்கப்பூரில் சிக்கனுக்கு கிராக்கி – இனி சிக்கன் பிரியர்களின் நிலை என்ன?

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பிரபல தமிழ் திரைப்பட இயக்குநரும், நடிகருமான சசிகுமார் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பிரபலம் டாஸ்ரிஃப் கான் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

இது குறித்து காணொளி வாயிலாக நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ள சசிகுமார், “தாய்நாட்டில் இருந்து சிங்கப்பூருக்கு சென்று பணியாற்றிக் கொண்டிருக்கும் எனது சகோதர, சகோதரிகளுக்கு வணக்கங்கள். மே 29- ஆம் தேதி அன்று மாலை உங்களை சந்திக்கவிருக்கிறேன். இந்த நிகழ்ச்சியானது கொரோனாவுக்கு பிறகு முதன்முறையாக நடைபெறவிருக்கிறது. தீபாவளி அன்று ‘Zoom’ என்ற காணொளி நிகழ்ச்சியில் கூறியிருந்தேன். அடுத்த முறை நேரில் சந்திப்பேன் என்று. அதேபோல், ‘MWC’ நிகழ்ச்சியில் உங்களை நேரில் சந்திக்கப்போகிறேன். இந்த நிகழ்ச்சியை முன்னெடுத்துள்ள சிங்டெல் மற்றும் ‘MWC’- க்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

சிங்கப்பூரில் சீனாவை விஞ்சிய இந்தியர்கள் – எல்லா நாடுகளையும் பின்னுக்கு தள்ளி பதிக்கப்பட்ட முத்திரை!

சசிகுமாரை நேரில் பார்க்க வேண்டுமா? https://fb.me/e/1reKOe8Uf என்ற இணையதள முகவரிக்கு சென்று பதிவு இன்றே செய்துக் கொள்ளுங்கள்.

நடிகரும், இயக்குநருமான சசிகுமார், சிங்கப்பூரில் வசிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு பல்வேறு வகையிலும் உதவி செய்தும், அவர்களை ஊக்கப்படுத்தியும் வருகிறார். குறிப்பாக, அவர்களுக்காக நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர், எந்தவித கட்டணமும் பெற்றுக் கொள்ளாமல், தனது பங்களிப்பைத் தொடர்ந்து செலுத்தி வருகிறார்.

தொழிலாளர் தின கொண்டாட்ட நிகழ்ச்சிகள் குறித்த மேலும் விவரங்களுக்கு ‘MWC’- யின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.