லாரியில் இருந்து சிதறிய உலோகத் துண்டுகளால் பல கார்கள் சேதம் – “டயர், ரிம் மாற்ற S$1,400 செலவு” என புலம்பும் ஓட்டுனர்கள்

Metal pieces fall malaysia truck KJE

கிராஞ்சி விரைவுச்சாலையில் (KJE) நேற்று (அக்டோபர் 3) சிதறிக் கிடந்த உலோகத் துண்டுகளால் பல கார்கள் சேதமடைந்தன.

மலேசிய பதிவு பெற்ற லாரியில் இருந்து உலோகத் துண்டுகள் கீழே விழுந்தது தான் அதற்கு காரணம் என்று வாகன ஓட்டிகள் பின்னர் கண்டுபிடித்தனர்.

“10 ஆண்டுகளாக வேலை செய்கிறேன்.. இப்போதுதான் சிங்கப்பூரை சுற்றிப்பார்த்து இருக்கிறேன்” – வெளிநாட்டு ஊழியர்களின் சுற்றுலா

இதனால் பாதிக்கப்பட்ட ஓட்டுநர்களில் ஒருவர், அவரது டயர்கள் மற்றும் ரிம்களை மாற்றுவதற்கு சுமார் S$1,400 செலவானதாக மதர்ஷிப்பிடம் கூறியுள்ளார்.

அவரின் கருத்துப்படி, சுமார் 10 முதல் 15 கார்களின் டயர்கள் சேதமடைந்ததாக அவர் கூறினார்.

இதற்காக வேண்டி அந்த மலேசிய லாரி ஓட்டுனரின் நிறுவனத்திடம் இழப்பீடு கேட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்ட அனைத்து ஓட்டுநர்களுக்கும் மலேசிய லாரி ஓட்டுனரின் விவரங்கள் மற்றும் அவர் சார்ந்த நிறுவனத்தின் புகைப்படத்தையும் எடுத்து வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

“ஊழியர்களுக்கு முறையான காலணிகள் இல்லை, விழுந்து காயம் ஏற்படும் அபாயம் அதிகம்” – சிக்கிய 435 நிறுவனங்கள்