“ஜூலை முதல் இரண்டு வாரங்களில் அதிக மழை பெய்யும்”- வானிலை ஆய்வு மையம் தகவல்!

Singapore heavy morning rain
Pic: FB/Singapore Laughs

 

வானிலை நிலவரம் தொடர்பாக சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம் (Meteorological Service Singapore- ‘MSS’) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சிங்கப்பூரில் ஜூலை மாதத்தில் முதல் இரண்டு வாரங்களில் அதிக மழை பெய்யும். பெரும்பாலான நாட்களில் காலையிலும், பிற்பகலிலும் இடியுடன் மழை பெய்யும். அதிகாலை நேரத்திலும், காலை நேரத்திலும் காற்று வீசக்கூடும்.

தேக்கா நிலையம் மூடல்… ஜூலை முதல் இயங்காது – காரணம் என்ன ?

இரண்டு வாரங்களில் பெய்யும் மொத்த மழை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சராசரிக்கும் அதிகமாக இருக்கும். அதேபோல், இரண்டு வாரங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் முதல் 34 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

தஞ்சோங் பகார் அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து; 50 பேர் வெளியேற்றம்!

கடந்த 1991- ஆம் ஆண்டு முதல் 2020- ஆம் ஆண்டு வரை ஜூலை மாதத்திற்கான சராசரி மழை அளவு 146.6 மி.மீ. ஆக இருந்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.