‘மாண்டாய்’ உயிரியல் பூங்காவைச் சுற்றிப் பார்த்து மகிழ்ந்த வெளிநாட்டு ஊழியர்கள்!

'மாண்டாய்' உயிரியல் பூங்காவைச் சுற்றிப் பார்த்து மகிழ்ந்த வெளிநாட்டு ஊழியர்கள்!
Photo: ItsRainingRaincoats Facebook Page

 

சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் ‘ItsRainingRaincoats’ என்ற தன்னார்வ அமைப்பு, வெளிநாட்டு ஊழியர்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறது.

இந்திய ஊழியரை கீழே தள்ளிவிட்டு, மோசமாக நடந்துகொண்ட விலையுயர்ந்த காரின் உரிமையாளர் – கொதித்தெழுந்த நிறுவனம்

குறிப்பாக, தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்டப் பண்டிகை நாட்களில் தன்னார்வலர்கள் மற்றும் நன்கொடையாளர்களின் உதவியுடன், சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு உணவுகள், பரிசுகள் உள்ளிட்டவைகளை வழங்கி, அவர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. அத்துடன், வெளிநாட்டு ஊழியர்களை விடுமுறை நாட்களில் சுற்றுலாவிற்கும் அழைத்துச் சென்று வருகிறது ‘ItsRainingRaincoats’ அமைப்பு.

'மாண்டாய்' உயிரியல் பூங்காவைச் சுற்றிப் பார்த்து மகிழ்ந்த வெளிநாட்டு ஊழியர்கள்!
Photo: ItsRainingRaincoats Twitter Page

அந்த வகையில், நான்காவது முறையாக வெளிநாட்டு ஊழியர்களை ‘மாண்டாய்’ உயிரியல் பூங்காவிற்கு அழைத்துச் சென்றது ‘ItsRainingRaincoats’. மாண்டாய் உயிரியல் பூங்காவைச் சுற்றிப் பார்த்து மகிழ்ந்த வெளிநாட்டு ஊழியர்கள், புகைப்படங்களை எடுத்து வாட்ஸ் அப் மூலம் குடும்பத்திற்கு அனுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

'மாண்டாய்' உயிரியல் பூங்காவைச் சுற்றிப் பார்த்து மகிழ்ந்த வெளிநாட்டு ஊழியர்கள்!
Photo: ItsRainingRaincoats

அத்துடன், பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் வன விலங்குகள், பறவைகள் உள்ளிட்டவையைப் பார்த்து மகிழ்ந்தனர். வெளிநாட்டு ஊழியர்களுக்கு உணவுகள், குளிர்பானங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்களையும் ‘ItsRainingRaincoats’ அமைப்பு வழங்கியிருந்தது. பின்னர், ‘ItsRainingRaincoats’ அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்கள் ஆகியோர் இணைந்து குழு புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.

ஆடவர் ஒருவரை கடித்த மலைப்பாம்பு.. கட்டுமான ஊழியருடன் சேர்ந்து பாம்பை பிடித்தபோது நடந்த விபரீதம்

இந்த சுற்றுப் பயணத்தின் போது, வெளிநாட்டு ஊழியர்கள் தங்களது கவலைகள் மற்றும் கஷ்டங்களை மறந்து, மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்தது நம்மால் காண முடிந்தது. இந்த சுற்றுப்பயணத்திற்கு உதவிய நன்கொடையாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ‘ItsRainingRaincoats’ நன்றி தெரிவித்துக் கொண்டது.