நிறுவனத்தை ஏமாற்ற போலியாக நடித்த வெளிநாட்டு ஊழியர் விடுவிப்பு

சுபாஸ் நாயருக்கு சிறைத்தண்டனை
Pic: File/Today

தனது நிறுவனத்தை ஏமாற்றுவதற்காக போலியாக பணியிடத்தில் காயம் ஏற்படுத்திக்கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட வெளிநாட்டு ஊழியர் விடுவிக்கப்பட்டார்.

திரு கிர்பால் சிங் (வயது 24) என்ற அந்த ஊழியர், இழப்பீடு கேட்டு மோசடி செய்ததாகவும், விசாரணை அதிகாரியிடம் பொய் சொன்னதாகவும் கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 8 அன்று குற்றம் சாட்டப்பட்டார்.

DBS & POSB இணைய சேவை முடக்கம்: இயல்பு நிலைக்குத் திரும்பியது!

அதே ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதி அன்று வேலையில் ஈடுபட்டிருந்த அவர், கிரைண்டரை இயக்கும் போது கட்டைவிரலை வெட்டிக்கொண்டார்.

இந்நிலையில், கடந்த செவ்வாயன்று மனிதவள அமைச்சகத்தின் வழக்கறிஞர்கள் குற்றச்சாட்டுகளை திரும்பப் பெற்றனர். மேலும், முன்னாள் கட்டுமான ஊழியரான அவருக்கு கடுமையான எச்சரிக்கை வழங்கப்பட்டது.

இதன் பொருள் என்னவென்றால், இந்திய நாட்டவரான அவர் மீது அதே குற்றத்திற்காக மீண்டும் குற்றம் சாட்ட முடியாது.

குற்றச்சாட்டுகள் ஏன் கைவிடப்பட்டன என்பதற்கான காரணமும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படவில்லை

சிங்கப்பூர் பயணம் செய்ய விரும்பும் சிங்கப்பூரர், நிரந்தரவாசி அல்லாதோருக்கு..