“வெளியில் நண்பர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி; இது மன அழுத்தத்தை போக்க உதவுகிறது” – வெளிநாட்டு ஊழியர்கள்

(PHOTO: Reuters / Edgar Su)

தீபாவளி பண்டிகை நாளில் (நவம்பர் 4) சிறப்பு பிரார்த்தனைக்காக சுமார் 800 பக்தர்கள் கோவிலுக்கு சென்றனர்.

அவர்களுடன் இந்தியாவை சேர்ந்த ஊழியர்களும் கலந்துகொண்டு சிறப்பு பிராத்தனையில் ஈடுபட்டனர். காலை 7 மணி முதல் மதியம் வரை பிராத்தனை நடைபெற்றது.

“அதிக உணவை வாங்க முடியவில்லை, மிகக் குறைவாகவே சமைத்தோம்” – தீபாவளி கொண்டாடிய வெளிநாட்டு ஊழியர்

சிங்கப்பூரில் பணிபுரியும் இந்திய ஊழியரான திரு குப்பன் ரெங்குசாமி, இந்தியாவில் உள்ள தனது குடும்ப உறுப்பினர்கள் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு அவரின் வேலை ஒரு முக்கிய காரணமாக இருப்பதாக நன்றியுடன் மகிழ்ந்தார்.

ஒன்பது ஆண்டுகளாக சிங்கப்பூரில் பணிபுரியும் 29 வயதான அவர், தீபாவளியில் செனோகோவில் உள்ள தனது தங்கும் விடுதிலிருந்து நான்கு மணி நேரம் வெளியே செல்ல அனுமதிச்சீட்டைப் பெற்று, ஸ்ரீ சிவ-கிருஷ்ணர் கோவிலில் தரிசிக்க சென்றார்.

அதாவது, மார்சிலிங்கில் உள்ள கிருஷ்ணர் கோவிலில் தனது நண்பர்களுடன் சேர்ந்து நன்றி செலுத்தும் பிரார்த்தனைகளிலும் அவர் ஈடுபட்டார்.

“நான் வெளியில் சென்று என் நண்பர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இது என் மன அழுத்தத்தை போக்க உதவுகிறது” என்றார்.

அதே போல, கடந்த 12 ஆண்டுகளாக சிங்கப்பூரில் டெலிவரி ஓட்டுநராக பணிபுரிந்து வரும் மற்றொரு வெளிநாட்டு ஊழியர் சுப்பையா ரமேஷ் (வயது 33), சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மார்சிலிங்கிற்கு இடம்பெயர்ந்ததை அடுத்து, கோயிலுக்குச் செல்வதை வழக்கமாக்கினார்.

இந்திய நாட்டை சேர்ந்த அவர், சுமார் 1½ ஆண்டுகளாக அங்கு தன்னார்வத் தொண்டு செய்து வருகிறார், அவர் தேவைப்படும் நேரங்களில் கோவிலில் உதவிகளையும் செய்து வருவார் என்றும் கூறப்படுகிறது.

திரு கணபதி என்ற மற்றொரு வெளிநாட்டு ஊழியர்கள், உட்லண்ட்ஸ் தங்கும் விடுதியில் வசிக்கிறார், அவர் தனது நண்பர்களுடன் கோயிலுக்குச் சென்றார்.

கோவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், நான்கு மணிநேரம் வெளியில் நண்பர்களுடன் இருப்பதில் அவர் மகிழ்ச்சியடைந்தார்.

வெளிநாட்டு ஊழியர்களின் மன நலனுக்காக வெளியே செல்லும் இடங்களும் விரிவு