வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதி உணவுத் தோட்டங்கள்: “ஊழியர்களுக்கு நல்ல உணவு, மன ஆரோக்கியத்தை வழங்கும்”

CMSC

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் உள்ள உணவு சமூகத் தோட்டங்கள், ஊழியர்களின் உணவுமுறைக்கு கூடுதலாக உதவும்.

மேலும், கடுமையான நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவுகளின்கீழ் உள்ளவர்களின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த ஓய்வு நேரத்தில் மகிழ்ச்சி தரும் பொழுதுபோக்கையும் வழங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பயணிகள் பயன்பெறும் வகையில், சிங்கப்பூரில் 90க்கும் மேற்பட்ட விரைவு பரிசோதனை நிலையங்கள்!

இந்த தொற்றுநோய், விடுதி உணவுப் பொருட்களை ஊழியர்கள் நம்பியிருக்கும் சூழலை மேலும் அதிகரித்துள்ளதாக, Covid-19 Migrant Support Coalition (CMSC) WeGarden திட்டத்தின் தலைவரான டாக்டர் வோங் ஹான் டெங் கூறினார்.

மேலும், இந்த உணவு தோட்டங்கள் புதிய விளைபொருட்களுடன் ஊழியர்களின் வழக்கமாக உண்ணும் உணவுகளை மேம்படுத்தும் என்றார்.

அதே போல, அந்த உணவு தோட்டங்கள் அவர்களுக்கு அமைதியை தரும் ஆறுதலான இடமாக இருக்கும் என்றும் அவர் நம்புவதாக கூறினார்.

SG சுற்றுச்சூழல் நிதியத்தின் (SG Eco Fund) Sprout உணவு வகையின்கீழ் நிதியுதவி பெறும் 42 திட்டங்களில் இந்த உணவு தோட்டமும் ஒன்றாகும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த 42 திட்டங்களுக்கு மொத்தம் S$280,000 நிதி பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பாலியல் கிளர்ச்சி சேவைகளை வழங்கும் மசாஜ் பார்லர்கள்: “ஏஜென்சிக்கு S$10,000 கட்டி வருகிறோம்” – பெண் ஊழியர்களின் பேட்டி