சிங்கப்பூரில் தமிழ்நாட்டு ஊழியரின் அரிய வெற்றி.. முதலாளிக்கு எதிராக வழக்கு – நஷ்டஈடு பெற்று சாதனை

fake jobs DHL Singapore indian workers scammed
Photo: You Tube screen grab from Migrant Workers Centre Singapore

சிங்கப்பூரில் தமிழகத்தைச் சேர்ந்த ஊழியர் ராமலிங்கம் முருகன் ஓர் அரிய வெற்றியைப் பெற்றுள்ளார்.

37 வயதான முருகன், லாரியில் இருந்து கீழே விழுந்த சம்பவம் தொடர்பாக வழக்கு தொடுத்திருந்த நிலையில் தற்போது அதில் வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.

செப். 1 முதல் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் – இந்திய ஊழியர்களுக்கு ஹோட்டல் துறையில் வேலை அனுமதி

24 பேருடன் லாரியின் பின்புறத்தில் வேலையிடத்துக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் இறங்கும் போது கீழே விழுந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

ரிகல் மரைன் சர்வீசஸ் நிறுவனத்தின் அலட்சியம் அல்லது அது கடமையை மீறியதால் தான் விபத்து ஏற்பட்டதாக ஊழியர் முருகன் தரப்பு வழக்கறிஞர் முஹம்மது அஷ்ரப் சையத் அன்சராய்
வாதிட்டார்.

இதில் முருகன் மீது எந்த தவறும் இல்லை என்றும் அவர் கவனக்குறைவாக செயல்படவில்லை என்றும் தீர்ப்பு வெளியானது.

இந்நிலையில், லாரியின் பின்புறத்தில் இருந்து நிறுவனத்தின் அலட்சியத்தால் தான் விழுந்ததாகவும், இதனால் அவருக்கு காயம் ஏற்பட்டதாகவும், அதற்காக S$100,000 நஷ்டஈடு கோரியும் அவர் நிறுவனத்தின் மீது வழக்கு தொடுத்தார்.

இந்நிலையில், இந்திய மதிப்பில் ரூ. 60.86 லட்சம் இழப்பீடு அவருக்கு கிடைத்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

என்ன நடந்தது?

திரு முருகன், கப்பல் பழுதுபார்க்கும் நிறுவனத்தில் எஃகு கட்டுமானம் மற்றும் பெயின்டராக பணிபுரிந்தார்.

2021 ஜனவரி 3 அன்று, அவர் தனது தங்கும் விடுதியிலிருந்து பூன் லேயில் உள்ள நிறுவனத்துக்கு 24 ஊழியர்களுடன் லாரியில் சென்றார். அங்கிருந்து, அவர் நியமிக்கப்பட்ட பணியிடத்திற்கு செல்ல மற்றொரு லாரியில் சென்றுள்ளார்.

அப்போது மழை பெய்து கொண்டிருந்ததால், லாரியில் ஊழியர்களை மாற்றும் பணி விறுவிறுப்பாக நடந்தது.

திரு முருகன், லாரியில் இருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்த போது, ​​மற்ற ஊழியர்களால் தள்ளப்பட்டதால் அவர் சமநிலை இழந்து கீழே விழுந்தார்.

அதன் பின்னர், அவர் Ng Teng Fong பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அவருக்கு முழங்கால் மூட்டு மற்றும் குருத்தெலும்பு உடைந்ததாக கண்டறியப்பட்டது.

பின்னர் அவருக்கு அவர் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 2021 ஜனவரி 3 முதல் ஜூன் 2 வரை அவர் மருத்துவ விடுப்பில் இருந்தார்.

லாரியில் இருந்து கீழே விழுந்த இந்திய ஊழியர்.. முதலாளி இழப்பீடு வழங்க வேண்டும் – தீர்ப்பு

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

Work Permit வெளிநாட்டு ஊழியர்களுக்கு PR, குடியுரிமை வழங்கப்படுவதில்லை ஏன்? ஒதுக்கப்படும் வெளிநாட்டு ஊழியர்கள்.. அடுக்கடுக்கான கேள்விகள்