“தமிழ்” உள்ளிட்ட தாய்மொழிகளில் பிழைகள்…வெகுண்டெழுந்த வெளிநாட்டு ஊழியர்கள் – மன்னிப்பு கேட்ட புலம்பெயர்ந்த ஊழியர் நிலையம்

Migrant Workers' Centre apologises
MD Sharif/Facebook

சூன் லீ ரோட்டில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கான பொழுதுபோக்கு கிளப்பைச் சுற்றி வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகைகளில் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பிழைகள் இருந்ததற்கு புலம்பெயர்ந்த ஊழியர் நிலையம் (MWC) மன்னிப்பு கேட்டுக்கொண்டது.

வங்காளதேச ஊழியர் ஒருவர் தனது தாய்மொழியில் எழுத்துப்பிழைகள் பல இருப்பதை கண்டு, அதனை புகைப்படம் எடுத்துள்ளார்.

MRT ரயிலில் பெண்ணிடம் தவறாக நடந்து, தன் பிறப்புறுப்பை காட்டிய வெளிநாட்டு ஊழியருக்கு சிறை, அபராதம்

ஆங்கிலம், சீனம், தமிழ் மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் அடங்கியிருந்த அந்த அறிவிப்பு பலகையில், “வெளியில் இருந்து உணவு மற்றும் பானங்கள் கொண்டுவர அனுமதிக்கப்படவில்லை” என்பதை ஊழியர்களுக்கு தெரிவிக்கும் வகையில் வாசகம் இருந்தது.

அதில் தமிழ் மற்றும் பெங்காலியில் பல பிழைகள் மற்றும் தவறான எழுத்துக்களும் இருந்தன. தமிழில் “உணவு” மற்றும் “அனுமதிக்கப்படவில்லை” ஆகியவை தவறாக இருந்தன.

TODAYவின் கேள்விகளுக்குப் பதிலளித்த MWC, அந்த பிழைகளை சரிசெய்துவருவதாக கூறியது. அதற்காக MWC மன்னிப்பும் கேட்டுக்கொண்டது

கடந்த ஏப்ரல் 7 அன்று முகநூல் பதிவில் MD Sharif Uddin கூறுகையில்; “பெங்காலியில் உள்ள மொழிபெயர்ப்பை சரிசெய்யுமாறு பொழுதுபோக்கு நிலைய அதிகாரிகளுக்கு தாழ்மையான வேண்டுகோள்” என்று கேட்டுக்கொண்டார்.

திருட்டு சம்பவம் தொடர்பாக இரு பெண்களை தேடிவரும் சிங்கப்பூர் போலீஸ்