வெளிநாட்டு ஊழியர்களே சலுகையை பயன்படுத்துங்க.. இனி வெறும் S$15 செலுத்தி இந்த சேவையை பெறலாம்!

New dental clinic for migrant workers
(Photo: AFP/Roslan Rahman)

சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டு ஊழியர்கள் வெறும் S$15 செலவில் தங்கள் பற்களைப் பரிசோதித்து, சிகிச்சையும் பெறலாம்.

இதனை HealthServe என்னும் உள்ளூர் தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

கட்டுமான தளத்தில் கண்டெடுக்கப்பட்ட மற்றொரு போர்க்கால வெடிகுண்டு.. கட்டுமான ஊழியர்கள் வெளியேற்றம்

அந்த தொண்டு நிறுவனம் ஏற்கனவே வெளிநாட்டு ஊழியர்களுக்காக GP கிளினிக் என்னும் பொது மருந்தகத்தை நடத்துகிறது.

கட்டுமான, கடல் மற்றும் செயல்முறை துறைகளில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு இந்த பல் சேவையும் முதன்மை பராமரிப்பு திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் சுமார் 2,500 வெளிநாட்டு ஊழியர்கள் பயன் அடைவார்கள் என்று எதிர்பார்ப்பு உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

பொதுவாக பல் மருத்துவரை சந்தித்து சொத்தை பற்களை அடைக்க S$200 செலவாகும் என்றும், இனி அந்த பிரச்சனை வெளிநாட்டு ஊழியர்களுக்கு இருக்காது என்றும் சொல்லப்பட்டுள்ளது.

இனி பற்கள் பிடுங்க வெறும் S$30 செலுத்தினால் போதும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மருத்துவமனை Geylang இல் இருக்கிறது, தேவையுள்ளோர் பயன்படுத்தி கொள்ளுங்கள். திங்கள் முதல் வெள்ளி வரை இயங்கும்.

“கைப்படாத பிரெஷ் உணவு, தயங்காம எடுத்துக்கோங்க” – உணவை வீணாக்காமல் பெஞ்சில் வைத்துச்சென்ற ஊழியர்