சிங்கப்பூரில் சுமார் 10,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்களுக்கு உணவுகள் விநியோகம்

Photo: ItsRainingRaincoats/FB

சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவும் வகையில் நேற்று சனிக்கிழமை (நவம்பர் 13) உணவுகள் விநியோகம் செய்யப்பட்டன.

புக்கிட் திமாவில் உள்ள ஆர்காடியா சாலையில் கார்கள் அடுத்தடுத்து வந்து சைவ பீட்சா மற்றும் சமோசா பெட்டிகளை எடுத்து சென்றன.

போக்குவரத்து சிங்னல் இல்லாதபோது சாலையை கடந்த மூதாட்டி – நூலிழையில் தப்பிய காணொளி

அவைகள் சிங்கப்பூர் முழுவதிலும் உள்ள வேலைத் தளங்களில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களுக்கும், இங்குள்ள சாலைகளில் உழைக்கும் ஊழியர்களுக்கும் விநியோகம் செய்யப்பட்டது.

தீபாவளி பண்டிகை முடிந்தும் அதன் மகிழ்ச்சியை தொடர்ந்து பரப்புவதை நோக்கமாக கொண்டு இது விநியோகம் செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர் தொண்டு அமைப்பான ItsRainingRaincoats (IRR) ஆண்டுதோறும் பாரம்பரியமான இந்த முயற்சியை செய்துவருகிறது. மேலும், இதனை திட்டமிடுவதற்கு சுமார் இரண்டு மாதங்கள் ஆனதாக இலாப நோக்கற்ற அமைப்பின் நிறுவனர் திருமதி தீபா சுவாமிநாதன் கூறினார்.

சுமார் 10,000க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு உணவுகள் விநியோகம் செய்யப்பட்டது. இதற்காக நன்கொடையாளர்களால் நிதியுதவி செய்தனர்.

அதாவது Pizza Hut, Alt Pizza மற்றும் கேட்டரர் Gourmet Ready ஆகிய நிறுவனங்கள் தங்கள் பங்களிப்பை வழங்கின.

இதில் சுமார் 1,400 பீஸ்ஸாக்கள் டெலிவரி செய்யப்பட்டன, அவற்றில் 1,000 பீஸ்ஸாக்களை Pizza Hut நிறுவனம் நன்கொடையாக வழங்கியது.

வேலை மாறும் ஒர்க் பெர்மிட் அனுமதி உடைய வெளிநாட்டு ஊழியர்களுக்கு MOM அப்டேட்