ஊழியர்கள் பயன்பெறும் வகையில் கூடுதலாக 235 மினிபேருந்துகள்: முன்பதிவு செய்ய நிறுவனங்கள் முன்வருமா?

(Photo: Aespada)

சிங்கப்பூரில் ஊழியர்களை ஏற்றிச்செல்லும் லாரிக்கு மாற்றாக மினிபேருந்துகள் குறித்த வழிமுறை தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட Aespada செயலி, ஆரம்பத்தில் லாரிகள் மற்றும் லாரி கிரேன்கள் உள்ளிட்ட கனரக வாகன சேவைகளை வழங்கியது.

வணிக ரீதியான பயணிகள் விமானங்கள்… இந்தியாவுடன் சிங்கப்பூர் பேச்சுவார்த்தை

இந்த மாதம், மினிபேருந்துகள் பலவற்றை அந்நிறுவனம் சேர்த்துள்ளது. அதில் 24/7 நேரமும் தற்காலிகமாக முன்பதிவு செய்யவும் அல்லது சிங்கப்பூர் முழுவதும் தங்கள் ஊழியர்களை அழைத்துச் செல்வதற்காகவும் நிறுவனங்கள் அணுகலாம் என்று அதன் நிறுவனர் திரு லி கூறினார்.

235 பேருந்துகள் நிறுவனத்தில் இணைய உள்ளதாகவும், மேலும் தேவை அதிகரிக்கும்போது அடுத்த மூன்று மாதங்களில் இணையும் என்றும் கூறப்பட்டுள்ளது.

“நிறுவனங்களில் சொந்தமாக வாகனங்கள் இல்லை என்றாலும், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான போக்குவரத்து சேவைகளை பெற Aespada-வுடன் முன்பதிவு செய்து ஒன்றிணைந்து கொள்ளலாம்.”

தனியார் வாடகை கார்களுக்கு கிராப் செய்வது போல இது சுலபமானது என்று, திரு லி விளக்கினார்.

நிறுவனம் தனது ஊழியர்களை வெவ்வேறு வேலைத் தளங்களுக்கு அனுப்ப வேண்டியிருக்கும் போது, ​​தற்காலிக அடிப்படையில் இந்த செயலி பயனுள்ளதாக இருக்கும் என்று அவர் கருதுவதாக கூறினார்.

ஊழியர்களை ஏற்றிச்செல்ல லாரிக்கு பதில் மினிபஸ்: இதுவரை 25 நிறுவனங்கள் கையெழுத்து!