வெளிநாட்டு ஊழியர் சார்ந்திருப்பை குறைக்க வழி உண்டு – அமைச்சர் சான்..!

Foreign workers are doing jobs that Singaporeans don't want to do. He said that to reduce the number of taxes, cultural practices had to change and the production process had to change rapidly.
Foreign workers are doing jobs that Singaporeans don't want to do. He said that to reduce the number of taxes, cultural practices had to change and the production process had to change rapidly. (Photo: The Star)

வெளிநாட்டு ஊழியர்களை சார்ந்திருக்கும் போக்கை குறைக்க மக்கள் பொது இடங்களை சுத்தமாக வைத்துக்கொண்டால் ஊழியர்களைக் குறைக்கும் வாய்ப்புகள் கிடைக்கும் என்று வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரர்கள் செய்ய விரும்பாத வேலையை வெளிநாட்டு ஊழியர்கள் செய்துவருகின்றனர். அவர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டுமெனில் கலாச்சார பழக்கவழக்கங்கள் மாறுவதோடு உற்பத்தி முறையும் வேகமாக உருமாற வேண்டிய அவசியம் உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் 12,000-க்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தப்பட்டு சமூக மருத்துவ வசதிகளில் பராமரிப்பு..!

கட்டுமானத் துறையில் ஊழியர்களை குறைக்க வேண்டுமெனில் முன் தயாரிப்புகளை நோக்கி அத்துறை வேகமாக நகர வேண்டும், அதேபோல் முன் வடிவமைப்பில் முயற்சி மேற்கொண்டால் உற்பத்தித் துறையிலும் அதனை செயல்படுத்தலாம், இத்துடன் மனிதவளத் தேவைகளை குறைக்க தொழில் நுட்பத்தையும் பயன்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் சான் தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்ப வர்த்தகத்தை தொடங்குவோருக்கு தொழில் முனைவோருக்கு உதவிசெய்வதன் மூலம் அறிவுச்சார் சொத்து பாதுகாப்பு, உள்ளூர்வாசிக்களுக்காக வேலையை உருவாக்குதல் ஆகியவற்றை உறுதி செய்ய முடியும் என்று சான் தெரிவித்துள்ளார்.

நிபுணர், மேலாளர், நிர்வாகி மற்றும் தொழில்நுட்பர் ஆகியோருக்கான பிரிவில் வெளிநாட்டினர் இருந்த போதிலும் உள்ளூர் ஊழியர்களைக் கொண்டு எவ்வாறு அப்பிரிவை நிரப்பலாம் என்ற முயற்சிகளை சிங்கப்பூர் அதிகரிக்கும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக இந்த சிரமமான காலத்தில் அவ்வாறு செய்வதன் மூலம் அனைத்துலக அரங்கில் ஒட்டுமொத்த சிங்கப்பூரும் தனது ஆற்றலை வழிப்படுத்த இயலும் என்றும் பல்வேறு நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணியில் அமர்த்துவதற்கான பாதுகாப்பு அம்சங்களில் கவனம் செலுத்துகின்றன என்று திரு சான் கூறியுள்ளார்.

உலக பொருளியல் பாதிப்புற்று இருக்கும் இந்த நிலையில் அனைத்துலக சந்தையில் தங்களை அனுமதிக்கும் இடங்களை திறனாளர்களும் தேடிவருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு திறனாளர்களுக்கு சிங்கப்பூரில் இடம் கிடைக்காவிட்டால் சிங்கப்பூருக்கு எதிராக ஆற்றலை அவர்கள் வெளிப்படுத்தும் நிலை ஏற்படலாம் என்று அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் பணிபுரிய ஊழியர்கள் தேடுவதில் சிரமம்..!