வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் பணிபுரிய ஊழியர்கள் தேடுவதில் சிரமம்..!

Difficulty in finding workers
Difficulty in finding workers Photo: Nuria Ling/TODAY

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளை நடத்துவோர் அதிக சம்பளம் தர தயாராக இருக்கும் போதிலும், விடுதிகளுக்கு பணிபுரிய ஊழியர்களை தேடுவதில் சிரமம் நிலவுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளுக்கு தேவையான உதவிகளை செய்யவும், அடுத்த கட்ட நடவடிக்கையில் பணிபுரியவும் ஊழியர்களின் தேவை அதிகரித்து வருகிறது.

இதையும் படிங்க : கோலாலம்பூர் – சிங்கப்பூர் இடையிலான அதிவேக ரயில் திட்டம் ஒத்திவைப்பு..!

விடுதிகளில் தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால், அங்கு வேலைக்கு செல்ல சிலர் அஞ்சுகின்றனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக அதிக ஊழியர்களை வேலையில் எடுப்பதில் சிரமம் நிலவுவதாக கூறப்படுகிறது.

பல தங்கும் விடுதிகளில் ஊழியர்கள் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகரித்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக S11 போன்ற தங்கும் விடுதிகள், துப்புரவாளர்களின் எண்ணிக்கையை ஒரு மடங்கு அதிகரித்துள்ளதாக ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

அதே போல ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்படும் செலவினங்களும் இரண்டரை மடங்கு அதிகரித்துள்ளது.

வயதில் மூத்த ஊழியர்கள் மற்றும் நாள்பட்ட மருத்துவப் பிரச்சினைகள் கொண்டிருப்போரும் இந்த வைரஸ்தொற்றால் எளிதில் பாதிப்பு அடையாளம். அதனால் இளைஞர்கள், உடல் உறுதி கொண்டிருப்போரும் மட்டுமே இது போன்ற பணிகளில் தங்களை ஈடுபடுத்த முடியும்.

இந்நிலையில், பணியில் சேருவதில் ஊழியர்களை ஊக்குவிக்க, பல்வேறு சலுகைகளை அறிமுகம் செய்துவருவதாக, தங்கும் விடுதிகளை நடத்துவோர் கூறியுள்ளனர். அதாவது போனஸ், கூடுதல் சம்பளம், பற்றுச்சீட்டுகள் போன்றவை அதில் அடங்கும் என்று செய்தி மீடியாகார்ப் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் ERP கட்டணங்கள் வசூலிப்பு குறைந்தபட்சம் ஜூன் 28 வரை இடைநிறுத்தம் : நிலப் போக்குவரத்து ஆணையம்..!