சிங்கப்பூரில் ERP கட்டணங்கள் வசூலிப்பு குறைந்தபட்சம் ஜூன் 28 வரை இடைநிறுத்தம் : நிலப் போக்குவரத்து ஆணையம்..!

குறிப்பிட்ட 7 இடங்களுக்கு ERP கட்டணங்கள் இல்லை - குறிப்பிட்ட கால நேரத்தில் இலவசமாக பயணிக்கலாம்
LTA

சிங்கப்பூரில் மின்னணு சாலை கட்டணங்கள் (ERP) குறைந்தபட்சம் ஜூன் 28 வரை வசூலிக்கப்படாது என்று நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

“சர்க்யூட் பிரேக்கர்” நடவடிக்கை முடிந்த பின்னர் அதிகமான மக்கள் வேலை மற்றும் பள்ளிகளுக்குத் செல்வார்கள் என்பதால், அதிக அளவில் போக்குவரத்து எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் புதிதாக 518 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!

மேலும், ஆணையம் வரும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 2) முதல் ERP கட்டண விகிதங்களை மறுஆய்வு செய்யும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், அவை குறைந்தபட்சம் ஜூன் 28 வரை இடைநிறுத்தப்படும் என்று LTA தெரிவித்துள்ளது.

கூடுதலாக LTA ஜூன் 2 முதல் ERP மறுஆய்வு செயல்முறையை மீண்டும் தொடங்கும் என்றும், போக்குவரத்து வேகம் மற்றும் நெரிசல் அளவைக் கண்காணிக்கும் என்றும் அது கூறியுள்ளது.

சர்க்யூட் பிரேக்கர் நடவடிக்கைக்கு பிறகு பிந்திய முதல் மறுஆய்வின் முடிவுகள் ஜூன் 4ஆவது வாரம் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மாற்றம் இருப்பின் பிறகு ஜூன் 29க்குப் பின் அது நடப்புக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களை தங்கவைக்க பள்ளி வளாகம் ஏற்பாடு..!

#when is phase 2 #when is phase 2 singapore #when is phase 2 of circuit breaker phase 3 singapore cb phase 1 2 3 #singapore phase 1 2 3 #phase 2 of circuit breaker